வரலாற்றில் இன்று-- ஜூன்13
வரலாற்றில் இன்று-- ஜூன்13
1525: கத்தோலிக்க திருச்சபை விதிகளுக்கு முரணான வகையில் ஜேர்மன் பாதிரியார் மார்ட்டின் லூதர் , கதரினா எனும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
1625: இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்ள்ஸ், பிரெஞ்சு இளவரசி ஹென்ரிட்டா மரியாவை திருமணம் செய்தார்.
1871: கனடாவின் லப்ராடர் பிராந்தியத்தில் சூறாவளியினால் சுமார் 300 பேர் பலி.
1934:அடோல்வ் ஹிட்லர், பெனிட்டோ முசோலினி இத்தாலியில் சந்தித்தனர்.
1952: சுவீடன் விமானமொன்று சோவியத் யூனியனினால் சுட்டுவீழ்த்தப்பட்டது.
1978: லெபனானிலிருந்து இஸ்ரேல் வாபஸ் பெற்றது.
1981: படையினரின் அணிவகுப்பொன்றை குதிரையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பிரித்தானிய அரசி இரண்டாம் எலிஸபெத் மீது 17 வயது இளைஞனான மார்கஸ் சாரஜென்ட் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். இதில் அரசிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
1982: சவூதி மன்னர் காலித் இறந்ததையடுத்து அவரின் சகோதரர் பஹ்த் மன்னரானார்.
1997: இந்திய தலைநகர் புதுடில்லியில் திரையரங்கொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 59 பேர் பலி. 100 பேர் காயம்.
2000: 1981 ஆம் ஆண்டில் பாப்பரசர் இரண்டாம் அருளப்பரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய துருக்கிய நபரான அலி அகாவுக்கு இத்தாலி மன்னிப்பளித்தது.
2005: சிறுவர் துஷ்பிரயோக வழக்கில் அமெரிக்கப் பொப்பிசைப் பாடகர் மைக்கல் ஜக்ஸன் விடுதலையானார்.
2006: நியூ ஹரைசன்ஸ் தனது பயண வழியில் 101,867 கிலோமீற்றர் தூரத்தில் 132524 APL என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது.
2007: திருகோணமலையில் மேர்சி கோப்ஸ் என்னும் பன்னாட்டுத் தன்னார்வ அமைப்பின் பிலிப்பீன்ஸ் பணியாளர் ஒருவர் சுடப்பட்டார்.
Post a Comment