என் காதல் கனவில்லை எனை வந்து சேர்வாயா?? காதல் ஏக்கம்......
என் காதல் கனவில்லை
எனை வந்து சேர்வாயா??
காதல் ஏக்கம்......
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
ஓராயிரம் ஆண்டாய் கடந்தேன்
உன் இதழ் உதிர்க்கும் புன்னகையில்
எனதுயிரைத் தொலைத்தேன்
முழுநிலா என் வதனமதில்
என் உயிர்க்காதல் திறந்தேன்
வின்மீனின் ஔிக்கீற்றில்
உன் சுவாசம் உணர்ந்தேன்
ஏக்கங்கள் எனை வாட்டும் பல இரவில்
உன் உரையாடல் அதை விரட்டும் சில நொடியில் ...
உனை அனைத்து என் முகம் புதைக்க
வரமொன்று தருவாயா
என் காதல் கனவில்லை
எனை வந்து சேர்வாயா??
- மலர்
நட்பின் பிரிவு கவிதை👇👇👇
http://thuvaanams.blogspot.com/2018/05/blog-post_15.html?m=1
"தூவானத்தின் காதல் தூறல்"
Post a Comment