விபச்சாரியின் குமுறல்........நான் வேசி
விபச்சாரியின் குமுறல்........
துளைகொண்ட மூங்கில் நான்
எனை அனைத்து செல்லும் தென்றல்களில் பாகுபாடு பார்ப்பதில்லை
சிவப்பு நிற விளக்கு எனது அடையாளம்
சிவந்த தேகம் எனது மூலதனம்
இரவில் என்னோடு ஒட்டியிருந்தவர்களும் காலையில் என்னைப்பற்றி ஊருக்குள் பிதற்றிக்கொள்வார்கள்
வந்தவர்கள் எல்லோரும்
என் உள்ளாடை வரை களைந்து
சதைகளை விரல்களாலும் உண்டவர்கள்.........ஆனால்
நகங்கள் தந்த காயங்களை அறியமாட்டார்கள்
ஆண்மையில் வெளிவந்த பசலையை
எனது இடையிலும் படுக்கை விரிப்பிலும் தெழித்துவிட்டு
முகம் சுழித்து போவார்கள்
வலியும் குருதியும் கசியும் எனது உடலை அவசரமாய் சுத்தப்படுத்தியாக வேண்டும்....
வரிசையில் எனது வாடிக்கையாளர்கள்
பணத்தோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்
குடிசையில் எனது குழந்தைகள் பசியோடு அழுதுகொண்டிருக்கிறார்கள்......
Post a Comment