மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள்................

மீன் மகள் பாடுகிறாள்
வாவி மகள் ஆடுகிறாள்................




அனுமன் வால் தீயனைத்த தீர்த்தமும்
சுயம்புலிங்க பிள்ளையாரும்
கல்மாடும் சாணம் இட்டு
கதை சொண்ன தான்தோன்றீஸ்வரமும்
புன்னைச்சோலை அன்னைக்காளியும்
பக்திக்கு மார்க்கம் சொல்ல...

கப்பலேந்திய அன்னையும்
காத்தான்குடி பள்ளியும்
புரங்களில் விகாரைகளும்
சர்வமத சாகித்தியமாய்
என் மட்டுநகர்...

நூற்றாண்டு கடந்த
ஒல்லாந்தர் கோட்டையும்
வெளிச்ச வீடும்
கல்லடிபாலமும்
கண்டு வியக்கும்
அறிவியல் ஆதாரங்கள்

வானெட்டும் கோபுரங்கள்
பல இருப்பினும்
தரை தட்டும்
விவசாயம் சிறப்பே

மதுரைத் தமிழ் பேசும்
மறத்தமிழர் குலத்தோர் வாழும்
கடலும் கங்கையும் சூழ்ந்த
பூமி இது....

கூத்தும் நாட்டியமும்
கலையும் கலாச்சாரமும்
கல்வியல் சிறப்பிற்கு
தேசிய பாடசாலைகள்
என தொன்று தொட்டு
உணர்த்துகிறது
மண் வாசனை...

பாசிக்குடாவும்
கல்லடிக் கடலும்
முகத்துவார படகும்
காந்திப்பூங்காவும்
குடும்பிமலையும்
சுற்றுலா குதூகலமே..

புலிபாய்ந்த கல்முதல்
ஆரையூர் சிலை வரை
வீரத்தின் அடையாளம்..

எத்தனை சிறப்புகள்
கண்டீர்
அத்தனையும் ஈடாகுமோ
மட்டு கன்னிகளின்
கண்ணசைவில்!

மீன்பாடும் தேனாடு.......










No comments