*ஸ்டெர்லைட்_ஆலையும்_அதன்_பின்னனியும்* நடப்பது என்ன?


இந்தியாவின் தூத்தூக்குடியில் பல அப்பாவி உயிர்களை காவு வாங்கிய ஸ்டெர்லைட் ஆலையின் பிண்ணனி என்ன?




இங்கிலாந்தை தலமையிடமாக கொண்ட அனில் அகர்வால் என்பவரை உரிமையாளராக கொண்டது  "ஸ்டெர்லைட்" ஆலையாகும்.



 "வேதாந்தா ரிசோர்ஸ்" நிறுவணத்தின் கீழ் இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்டெர்லைட்.

5.முக்கிய உற்பத்தியாக தாமிரம் (copper ) ஐயும் கழிவு உற்பத்திகளாக தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம்  என்பவற்றையும் உற்பத்தி செய்கிறது ஸ்டெர்லைட்

முதலில் இவ் ஆலையை அமைப்பதற்காக குஜராத் தேர்வு செய்யப்பட்டதோடு அனுமதி அங்கே மறுக்கப்பட்டது. குஜராத் மட்டுமல்லாமல்  அனுமதி மறுத்த மாநிலங்கள்  மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா என்பனவாகும்.

தமிழ்நாட்டிற்கு முன் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி அளித்து சூழல் மாசடைவு உட்பட பல  பிரச்சினைகளை  மகாராஷ்டிரா , ரத்னகிரி ஆகிய மாநிலங்கள் அனுபவித்தது.

அதனைத் தொடர்ந்து தழிழ்நாட்டில் ஸ்டெர்லைட்டிற்காக அடிக்கல் நாட்டியவர்  முன்னாள்  முதல்வர் ஜெ.ஜெயலலிதா 1994 ஆவார்.
ஆலை இயங்க அனுமதியளித்தவர்  முதல்வர் மு.கருனாநிதி 1996 ஆவார்  தூத்துக்குடி துறைமுகத்தை முன்னிருத்தி இதற்கான அனுமதி அளிக்கப்பட்டது.

ஆலைக்கான முதல் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டம் 1996ம் ஆண்டு வெடித்து ஆனால் தென் மாவட்ட சாதிசண்டையின் காரணமாக போராட்டம்  கைவிடப்பட்டது..



ஆலையின் பயண்பாட்டிற்கான நீர்  தாமிரபரணி ஆற்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதால்
ஆலைக்கு எதிரான முதல் வழக்கு-1997 நவம்பர்7 தொடுக்கப்பட்டது.

ஆலையின் முதல் விபத்து 1997ல் ஏழு சிலிண்டர் வெடித்தது
இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடித்து ஒருவர் பலியானார்
மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி-3)
நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர்-5,கூலித் தொழிலாளி -1)
ஐந்தாம் விபத்து - ஆயில் டேங்க் வெடிப்பு
ஆறாம் விபத்து - நச்சுப்புகை வெளியேற்றம்
கோர விபத்து ஆலைக்கு எதிராக போராடியவர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டமை....



70000டன்  உற்பத்தி அளவே அனுமதிக்கப்பட்ட நிலையில்
உற்பத்தி செய்வது 2லட்சம் டன் (2005 கணக்கில்)
ஆலையை மூட முதல் தீர்ப்பு -2010 செப்டம்பர் 28ல் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவினால் பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் மீண்டும் ஆலை திறக்க அனுமதித்து உச்சநீதிமன்றம்.

இந்த ஆலைக்கு தமிழ்நாடு பசுமை வாரிம்  தடைவிதிக்க தேசிய பசுமை வாரியம் அனுமதி அளித்துள்ளது....

"தூவானத்தின் கள ஆய்வு"

No comments