வரலாற்றில் இன்று-- ஜூன்20
வரலாற்றில் இன்று-- ஜூன்20
1900 : எதுவார்த் தோல் என்பவர் தலைமையிலான, 20-பேர் கொண்ட குழு, வடமுனைக்கான ஆய்வுப் பயணத்தை ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரிலிருந்து ஆரம்பித்தது. அத்துடன் பயணமான இக்குழு, திரும்பி வரவேயில்லை.
1940 : இரண்டாம் உலகப் போர் - இத்தாலி, பிரான்சை ஊடுருவியது. ஆனால் இது தோல்வியில் முடிவடைந்தது.
1956 : வெனிசுவேலாவைச் சேர்ந்த, லீனியா 253 விமானம் நியூ செர்சி, அசுபரி பார்க் அருகே அத்திலாந்திங்குப் பெருங்கடலில் மூழ்கியதில், 74 பெர் உயிரிழந்தனர்.
1960 : மாலி கூட்டமைப்பு பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றது. இது பின்னர் மாலி, செனிகல் என இரண்டாகப் பிரிந்தது.
1973 : அர்கெந்தீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் இடதுசாரிகள் மீது குறி சுடுநர்கள் சுட்டதில், 13 பேர் கொல்லப்பட்டனர். 300 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
1990 : ஈரானின் வடக்கே 7.4 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 35,000 –50,000 வரையானோர் உயிரிழந்தனர்.
1991 : ஜேர்மனியின் தலைநகரை, பான் நகரிலிருந்து பெர்லினுக்கு மாற்றுவதற்கு ஆதரவாக, செருமன் நாடாளுமன்றம் வாக்களித்தது.
1941 : சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர் பிறந்த தினமாகும்.
2003 : விக்கிமீடியா நிறுவனம் புளோரிடாவின் சென். பீட்டர்சுபர்க் நகரில் ஆரம்பமானது.
Post a Comment