வரலாற்றில் இன்று-- ஜூன்6


வரலாற்றில் இன்று-- ஜூன்6



1508 – புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமிலியன் பிரியுல்லா என்ற இடத்தில் வெனிசியப் படைகளிடம் தோற்றான்.

1752 – மொஸ்கோவின் மூன்றில் ஒரு பங்கு தீயினால் அழிந்தது. 18,000 வீடுகள் சேதமடைந்தன.

1808 – நெப்போலியனின் சகோதரன் ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னன் ஆனான்.

1844 – கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது.

1859 – குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

1882 – அரபிக் கடலில் இடம்பெற்ற புயலால் பம்பாயில் (மும்பை) 100,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர்.

1912 – அலாஸ்காவில் நொவரப்டா எரிமலை வெடித்தது.

1974 – சுவீடனில் நாடாளுமன்ற் முடியாட்சி அமைக்கப்பட்டது.

1981 – இந்தியாவில் தொடருந்து ஒன்று பகுமதி ஆற்றில் தடம் புரண்டு வீழ்ந்ததில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1984 – இந்திய இராணுவத்தினர் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு 335 பேர் காயமுற்றனர்.

1993 – மங்கோலியாவில் முதலாவது நேரடியான அதிபர் தேர்தல் நடைபெற்றது.

2004 – இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.


வரலாற்றில் இன்று-- ஜூன்5

http://thuvaanams.blogspot.com/2018/06/5.html?m=1


"தூவானத்தின் வரலாற்றுத்துளி"

No comments