என்னை நனைத்த தூவானம் நீ என்னில் இருந்து தூரமானதேன் ?


என்னை நனைத்த தூவானம் நீ
என்னில் இருந்து தூரமானதேன் ? 




என்னை நனைத்த தூவானம் நீ
என்னில் இருந்து தூரமானதேன் ?
கண்கள் வரைந்த கவிதை நீ
என் கண்ணீர் வழிய காரணமானதேன் ?

காயங்கள்  நான் மறைக்க
காதலை நீ மறந்தாய்
அகழ் விளக்காய் அனைய காத்திருக்கும் என் ஆருயிரின் அகம்  நீ

ஏங்கங்களும் உன் நினைவுகளும்
எனை விட்டு பிரிவதாயில்லை
நினைவுகளில்  நீ இருப்பின் அது சாத்தியம்.....
நினைவுகளே நீயாக இருப்பின்..........

"இதுவும் கடந்து போகும்" என்று என்னால் கடக்கவும் முடியவில்லை.......
நான் காதலில் கரைந்தவன்

உன் வதனமதில் நான் கண்ட செழிப்பை மாய்க்க விரும்பவில்லை
ஆதலால் எனை மாய்க்கும் முடிவையும் மறுபரிசீலனை செய்துவிட்டேன்...

காதலாக வந்தாய் கண்ணீராக செல்கிறாய்.
கண்ணீரோடு கரைந்து செல்லட்டும் எனது கணவுகளும்!

"தூவானம் தூவ தூவ"





No comments