மீன்பாடும் தேனாடு.... மட்டக்களப்பின் சிறப்புகள்.


மீன்பாடும் தேனாடு....
மட்டக்களப்பின் சிறப்புகள்.



மட்டக்களப்பில் என்ன இருக்கின்றது பார்ப்பதற்கு என்று கேட்கும் சில அறியாதவர்களுக்கான பதிவு இது
மனதுக்கினிய மண் வாசனை மிக்க மட்டு மண்ணில் பார்ப்பதற்கா இடமில்லை என்று நினைக்கக்கூடிய இடங்களும் உண்டு கண்ணைக் கவரும் காணகங்களும் காதுக்கினிய காணம் பாடும் கல்லடிபால மீன்களும்
அங்காங்கே கண்ணைக்கவரும் காந்தி பூங்கா வாவிக்கரைப்பூங்கா போன்ற பல பூங்காவனங்களும்
நாவிற்கினிய அறுசுவை உணவுகளும் பராமரிப்புக்களும்
மட்டுக்கே நீர் வழங்கும் உன்னிச்சைகுளமும்
செல்லுமிடமெல்லாம் பாலங்களும் பச்சைப்பசேலென வயல்வெளிகளும்
ராமபிரான் தீர்த்தமாடிய மாமாங்கமும்
நந்தி புல் தின்ற கொக்கட்டி மரத்தின் நடுவே உள்ளகொக்கட்டிசோலையும்
சுயம்புலிங்க களுதாவளை பிள்ளையாராலயமும்
மலைமீது வீற்றிருக்கும் தாந்தா மயில்வாகனன்  ஆலயமும்
 இப்படியான கோவில்களுக்கு மத்தியில் வெள்ளையர் காலத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட தேவாலயங்களும் பல அறிவாளிகளை உருவாக்கிய பரபல்யமான கல்லுரிகளும் கிழக்கு பல்கலைக்கழகமும்
இரவிலும் ஒரு பகலைக் காட்டும் திருமலை வீதியும் வீதி நடுவே அழகிய பூமரங்களும்
ஆங்காங்கே அழகிய கடற்கரைகளும்
கோட்டையை சுற்றி நகரத்தின் நடுவே செல்லும் நதியும் ஓர் அழகு அது சேருமிடம் முகத்துவாரம் அதிலொரு கலங்கரை விளக்கம் அதைசுற்றி உள்ள பூங்கா மற்றும் அதிலுள்ள தீவு பூங்கா அணைத்தும் அழகே
மலைகளும் குளங்களும் காணகங்களும் கதிர் நிறைந்த வயல்களும் கடற்கரைகளும் அருவிகளும் கொண்ட இயற்கை அழகுமிக்க நகரமே நம்ம மட்டக்களப்பு.































     தமிழன் நவா..

No comments