நவீன தொழில்நுட்பத்தின் தற்காப்பு வழிகள்....

நவீன தொழில்நுட்பத்தின் தற்காப்பு வழிகள்....



நவீன தொழிநுட்ப வளர்ச்சியினைப் பற்றி பல விடயங்கள் தொரியாமல் பல ஆண்கள்,  பெண்கள் சீரழிகின்றனர்.. இதனால் பலரது வாழ்கையையே இழக்கின்றனர். நவீன உபகரணத்தின் பாவனையை முறைப்படி பாவிக்க தெரியாமல் பல பேர் பல பிரச்சினைகளில் மாட்டி தவிக்கின்றனர். இதனை சற்று விளக்கி தெளிவு படுத்தும் நோக்கில் சில விடயங்களை எழுதலாம் என்று நினைக்கின்றேன். உங்களுக்கு இது உதவாவிட்டாலும் மற்றவர்களுக்கு பகிர்வது மூலம் பிரயோசனம் அடைய வழி செய்யுங்கள்.

பாவித்த மொபைல் போன்களை விற்காதீர்கள் - தற்காலத்தின் நவீன மென்பொருள்களின் வருகையால், நீங்கள் பாவித்து விட்டு அனைத்தையும் Delete செய்த பின்னர் விற்பனை செய்தாலும் அனைத்தையும் அந்த போனிலிருந்து எடுக்க முடியும். இது தெரியாமல் பல பேர் மற்றவர்களுக்கு விற்பனை செய்கின்றனர். நீங்கள் பாவித்த போனை பாவித்து முடித்தால், உடனே அதனை கண்முன்னே உடைத்து பற்ற வையுங்கள். இது ஒன்றின் மூலமே உங்களது போனின் இரகசியம் பேணப்படும். சிலர் அந்தரங்க விடயங்களைக்கூட படம் பிடிக்கின்றனர். எக்காரணத்திற்காகவும் இவ்வாரான விடயங்களில் ஈடுபட வேண்டாம். உங்களது பொனில் பழுது ஏற்பட்டால் நம்பிக்கையான போன் திருத்தினரிடம் மட்டுமே எடுத்து செல்லுங்கள். ஏனெனின், பல போன் திருத்தினர்கள்தான் உங்களுடைய போனிலிருந்து உங்களுடைய போட்டோக்களையும் பல தகவல்களையும் எடுக்கின்றர். நீங்கள் Delete செய்திருந்தாலும் சரி. அவர்களால் எடுக்க முடியும் என்பதனை மறவாதீர்கள். இயலுமாயனவரை அருகிலிருந்து வேலை முடியும் வரை காத்திருந்து வாங்கி செல்லுங்கள்.



TrueCaller Software(App) பயன்படுத்துபரவராக இருந்தால், தயவு செய்து இனி அதனை பயன்படுத்த வேண்டாம். அதன் மூலம் பல தனிப்பட்ட விபரங்களை நீங்கள் அந்த Software ஐ உற்பத்தி செய்த நிறுவனத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றீர்கள். இது எவ்வாறு என்றால், நீங்கள் Truecaller ஐ உங்களது போனில் Install செய்ததும் உங்களது போனில் உள்ள அனைத்து Contact Numbers உம் Copy செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றது. இவ்வாறு பல போன்களில் இந்த Software ஆனது நிறுவப்படும் போது அனைவரினதும் Contacts உம் copy செய்யப்படுகின்றது. இதன் மூலம் நீங்கள் ஒரு நம்பரை தேடும் பொழுது அவர்களுடைய Contacts List  இல் சென்றுதான் தேடி உங்களுக்கு கொண்டு வருகின்றது. நீங்கள் தேடும் நம்பர் யாரே ஒருவர் ஏதோ ஒரு பெயரில் பதிந்து வைத்திருப்பார். அதனையே உங்களுக்கு காட்டுகின்றது. இதன் மூலம் நீங்களே அவர்களுக்கு உங்களுடைய number களை அனுப்புகிறீர்கள். நீங்கள் கெடுவது மட்டுமல்லாது மற்றவர்களையும் மாட்டி விடுகிறீர்கள். நீங்கள் இரகசியமாக பாதுகாக்க நினைக்கும் நம்பர்கள் கூட மற்றவர்களுக்கு அனுப்பி வைக்கிறீர்கள். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பதே நன்று.. இப்போதே அதனை நீக்கி விடுங்கள். அவ்வாறுதான் நீங்கள் ஒரு நம்பரை தேட வேண்டும் என்றால் ##www.truecaller.com என்ற இனைய தளத்தில் சென்று தேட முடியும். அவ்வாறு தேடும் பொழுது உங்களிடம் Email முகவரியை கேட்கும். அந்த நேரத்தில் போலி முகவரியை உருவாக்கி கொடுப்பது ஏற்றம். இது போன்ற நேரங்களில் போலி அல்லது வேரொரு முகவரியை வைத்திருப்பது நல்லது.


உங்களது போனில் தேவையற்ற Apps ஐ பதிய வேண்டாம். தேவையற்றது மூலமாக நீங்கள் உங்களது பணத்தினை இழக்கக் கூடும். சில நேரங்களில், நீங்கள் , உதாரணத்திற்கு, MX Player செயலியை(Apps) பயன்படுத்திக் கொன்டிருக்கும் பொழுது சில விளம்பரங்கள் தோன்றும். இதனை நீங்கள் தவறுதலாக அதன் மேல் அழுத்தும் சமயத்தில் உஙகளை வேரோரு Website ற்கு அழைத்துச் சென்று நிறுத்தும். அப்போது அதில் ஏதாவது ஒன்றை நீங்கள் அழுத்தும் போது உங்களது சிம்மிற்கு எதாவது ஒரு Service Active ஆகி சேவைக் கட்டணம் அறவிடப்படும். இப்படி பல பேர்களுக்கு நடந்துள்ளது. தேவையற்ற Apps களுக்கு இது போன்ற செயற்பாடுகள் நிறையவே ஏற்படும்.

தேவையற்ற, தெரியாத அறிமுகமற்ற மென்பொருட்களை (App)  களை உங்களுடைய போனில் பதிய வேண்டாம்.. பல மெற்பொருட்கள் நீங்கள் உங்களுக்கே தெரியாமல் தானாக Camera வானது On ஆகி நடப்பவை அனைத்தையும் Video வாக பதிவு செய்கின்றது. இதனை நீங்கள் எப்போது Net ஐ ஒன் செய்கின்றீர்களோ, அந்த Video வானது இன்னொருவருக்கு அனுப்பப்படுகின்றது. நீங்கள் இவ்வாறான அறிமுகமற்றவற்றை பயன்படுத்தும் போது இவ்வாறான விபரீதங்கள் ஏற்படலாம். எக்காரணத்தின் போதும் போன்களை பாத்ரூம் போன்ற இடங்களில் பாவிக்க வேண்டாம். அதே போன்று தொரியாதவர்களுக்கும் உங்களுடைய போனைக் கொடுக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அவர்களோ உங்களது மொபைலில் அது போன்று செய்து விட்டு உங்களை கண்கானிக்க முடியும்.


அதேபோன்று Whatsapp யிலும் ஒருவருடைய விடயங்களை கண்கானிக்க முடியும். Whatsapp யில் மேல் இடத்தில் மூன்று புள்ளிகள் காணப்படும் இடத்தில் சென்று அங்கு Whatsapp Web யினை தெரிவு செய்து பாருங்கள். யாரயவது உங்களது Whatsapp உடன் Connect யில் இருந்தால் அந்த விபரம் அதில் தெரிய வரும். (மேலதிக விபரத்திற்கு Google செய்க). இது போன்று பல விடயங்கள் நமாம் பயன்படுத்தும் Smart Phone யில் ஒளிந்து இருக்கின்றது.   

அடுத்து, Whatsapp களில் தற்போது பல link கள் வலம் வருகின்றன. உங்களுடைய நண்பர்கள் கூட Messages களாக லின்க்களை அனுப்புவதனை கண்டிருப்பீர்கள். இதனை அவர்கள் வேடிக்கையாக கருதுகின்றன். இதில் பல ஆபத்துக்கள் மறைந்திருக்கின்றன. இந்த லின்க் இனை அழுத்தி உள்ளே சென்றதும் அங்கே சில விடயங்களை காட்டி உங்களுக்கும் Try This இப்படி வரும். அதனை கிளிக் செய்யும் போது கட்டாயம் உங்களுடைய ஏதாவது ஒரு Account ஐ இனைக்க சொல்லும். உதாரணத்திற்கு Facebook, Gmail, LinkId and etc.. இதனை நீங்கள் இணைப்பதன் மூலம் உங்களுடைய Facebook உடைய கணக்கு விபரம் மற்றும் உங்களுடைய விபரங்கள் அனைத்துமே எவனோ ஒருவருக்கு செல்கின்றது. அந்த விபரங்கள் மூலம் உங்களுடைய FB, Gmail பொன்ற கணக்கினை இலகுவில் ஹெக் செய்யலாம். அவ்வாறு செய்யப்பட்டால், நீங்கள் இது வரை யாரோடு எப்படி Chat, Calls பன்னிருப்பீர்கள் என்ற விபரத்தினை வெளியிட்டால் எப்படி இருக்கும் என்பதனை சற்று சிந்தியுங்கள். பல  பேர் உங்களுக்கு தெரியாமலே பல விதமான website களுடன் உங்களது Fb கணக்கு இணைக்கப்பட்டிருக்கும். பல பேர் நீங்கள் 60 வயதில் எப்படி இருப்பீர்கள் என்றும், உங்களுடைய முகத்திற்கு Doggy Face எப்படி இருக்கும் என்றும் உங்களுடைய காதலின் அளவு என்ன என்றும் உங்களுடைய Twin எங்கே உள்ளார் என்றும் உங்களை நேசிக்க கூடியவர்கள் யார் என்றும் பலவாறு உங்களுடைய Facebook இல் செய்து பார்த்திருப்பீர்கள். இவ்வாறு செய்த அந்த கனமே உங்களுடைய கணக்கு விபரம் இன்னொருவருக்கு சென்றிருக்கும்.. இதன் மூலம் அவர்கள் உங்களுடைய தகவல்களை பெற்றுக் கொள்கின்றனர். சிறிது நேர இன்பத்திற்காக ஏன் நீங்கள் பேராபத்தில் சிக்கி தவிக்க போகிறீர்கள். அவ்வாறு fb உடன் இணைக்கப்பட்டுள்ளதை உடனடியாக நீக்கிக் கொள்ளுக்கள். Facebook சென்று Settings – Account Setting – Apps – Logged with Facebook இல் சென்று அனைத்ததையும் Remove செய்து கொள்ளுங்கள்.

இது போன்ற சேவைகள் அவர்களுடைய சுய நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்படுகின்றன. இதில் நாம் விளையாடுவதாக நினைத்துக் கொண்டு ஏமார்ந்து கொண்டிருக்கின்றோம்.
அடுத்து, Whatsapp, Facebook இல் வரும் எந்தவொரு தேவையற்ற Link களை தொடவே தோட வேண்டாம். ஏனெனின் இது மூலமாக உங்களுடைய போன் முற்று முழுதாக ஹெக்  செய்யப்படலாம். சில நேரங்களில் இந்த செயலிகளில் வரும் லின்க் களை கிளிக் செய்யும் போது Facebook திறந்து உங்களுடைய User Name and Password  களை கேட்கும். அது உண்மையான Facebook ஆக இருக்காது. நீங்கள் சரியான website address ஆ என்று சோதிப்பீர்களாயின் facebook என்பதற்கு பதிலாக faceboek போன்று இருக்கும். book  இல் boek என்பது போல் இருக்கும். இது உங்களை ஏமாற்றி உங்களது தகவல்களை பறிக்கும் செயற்பாடுகளாகும். தயவு செய்து இவ்வாறான Link களை அழுத்தாமல் இருப்பதே சிறந்தது.

Internet இல் நீங்கள் இருக்கும் போது உங்களது திரையில் ஏதாவது ஒரு விளம்பரம் வந்தால், உதாரணமாக நீங்கள் ரூ.100,000 Win பன்னியுள்ளீர்கள் என்று வந்தால் தயவு செய்து அந்த விளம்பத்தின் மீது click செய்து உள்ளே போக வேண்டாம். அவ்வாறு சென்றால், நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  உங்களிடம் பல விபரங்கள் கேட்டு விண்ணப்ப படிவம் ஒன்றினை நிரப்ப செல்லப்படும். அதன் பிறகு உங்களது விபரம் அணைத்தினையும் வாங்கி விட்டு Email  ஊடாக தொடர்பு கொள்கின்றோம் எனக்கூறி விட்டு செல்லுவார்கள். நீங்களும் வருடக்கணக்கில் காத்த்திருப்பதுதான் மிச்சம். நீங்கள் யோசிக்கலாம் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் என்று. இவ்வாறு ஒருவரைப்பற்றி தகவல்களை எடுப்பதன் மூலம் உழைக்கலாம் என்பதே உண்மை. சில நிறுவனங்கள் உள்ளன. அவர்கள் 500 Email Address களை வாங்கி விட்டு $100 களை வழங்குவார்கள். இதற்காக இவர்கள் பல யுக்திகளை பயன்படுத்தி உங்களிடம் Email களை பெற்று அவர்களிடம் விற்பனை வெய்வார்கள். அவர்கள் அவ்வாறு வாங்கிய Emails களினூடாக அவர்கள் பல நிறுவனத்தின் விளம்பரங்களை உங்களுடைய Email  ற்கு அனுப்புவார்கள். ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தினை ஒரு Email முகவரிக்கு அனுப்பினால் அந் நிறுவனம் $0.1 Dollar  யினை வழங்கும். இதனை பலருக்கு அனுப்புவதன் மூலம் அவர்களால் நிறைய சம்பாதிக்க முடியும். பலருக்கு இது மாதிரியான Email களை பெற்றிருப்பீர்கள். அனைத்துமே இது போன்ற செயற்பாடுகள் மூலமே நடைபெறுகின்றன. அதே போன்று இந்த Emails களை பல நிறுவனங்களுக்கும் Hackers களுக்கும் விற்பனை செய்ய முடியும். பல Famous ஆனவர்களின் Email முகவரிகள் அதிக விலைக்கு வாங்குவார்கள். இந்த Email மூலமாக, அவர்களுடைய வங்கி கணக்கின் விபரங்களை இலகுவாக email இன் உதவியுடன் பெற முடியும். சாதாரணமானவர்கள் இவ்வாறு வங்கி செயற்பாடுகளை இனையத்துடன் மேற்கொள்வதில்லை.
ஒரு Email ஹெக் செய்யப்பட்டால், அதன் உதவியுடன் உங்களது சம்பந்தப்பட் அனைத்தையும் ஒருவருடைய Control ற்கு கொண்டு வரமுடியும். இது அனைத்துமே உண்மை. நம்பித்தான் ஆக வேண்டும்.

மேலதிகமாக, உங்களுடைய போனில் GPS Location ஐ OFF  செய்து வையுங்கள். இதன் மூலமாக உஙகள் வதிவிடம் பற்றிய செய்திகள், உங்கள் போனில் பதிந்துள்ள பல Apps களுக்கு அனுப்பப்படுகின்றன். தேவையற்ற எந்த ஒரு Apps, Games ஐ யும் உங்களது போனில் பதிய வேண்டாம். சில செயலிகளைப் பயன்படுத்தும் போது அந்த செயலிகள் (App) எவ்வாறு செயற்படுகின்றன எனபதில் அவதானமாக இருங்கள்.  செயலிகளை (Apps) நீங்கள் உங்களுடைய போன்களுக்கு Install செய்யும் போது உங்களிடம் சில விடயங்களுக்கு Permission கேட்கும். அவ்வாறு கேட்கும் போது அதனை வாசித்து உங்களுக்கு சரி எனும் படும் பட்சத்தில் மட்டும் அனுமதியளியுங்கள்.
மேற்கூறிய விடயங்களை பின்பற்றுவதன் மூலம் பல நவீன தொழிநுட்ப பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். மேலதிக அறிவுரைகள் தேவைப்படின் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள். இதனை மற்றவர்களுக்கும் பகிர்வதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் தீங்கினை தவிர்த்துக் கொள்ளலாம்.


தூவானம்

No comments