Computer காதல் ...இணைப்பிற்கான ஏக்கம்
Computer காதல் இணைப்பிற்கான ஏக்கம்
உள்ளீடுகளாய் எனது உணர்வுகளைத்தருகிறேன்
உன்னிடமிருந்து வெளியீடுகள் ஏதுமில்லை
உன் மணதின் செயன்முறைகள் செயலற்றுப்போனதா - இல்லை
இயங்கு தளமே இயக்கம் இன்றி கிடக்கிறதா?
என் நிணைவகங்களில் உன் நிணைவுகளைத் தவிர வேறேதுமில்லை
உன்னைச்சார்ந்த கோப்புகள் மாத்திரமே சேமிப்பில்...........
உன் பெயர்தாங்கியதால் என் தீச்சுவர் கூட உனது பதிவுகளை தீண்டமறுக்கிறது
என் மணத்திரையில் மாற்றம் இன்றி
உனது விம்பமே இடைமுகமாக என்றும்.......
என் வண்கூட்டை கட்டுப்படுத்தும்
உன் மென்பார்வையிடம் கேட்டுப்பார்
எனக்காக ஒருவரி செய்நிரலேனும் எழுதப்பட்டிருக்கும்..
உனது பிரதான நிணைவகத்தில் இல்லையெனிலும்
தற்காலிக நிணைவகத்திலாவது நான் தற்செயலாய் சேமிக்கப்பட்டிருப்பேன்!
உனக்கான எ(மி)ன் வழங்கல் இருக்கும் போதே.......
எனை இற்றைப்படுத்திவிடு இல்லையேல் வைரஸ்களின் தாக்கத்தால் உன்னுள்ளேயே மறக்கப்பட்ட தகவலாகிவிடுவேன்!.
உன்னுடன் இனைப்பிற்காக கையில் வடத்துடன்காத்திருக்கும் நான்.............
"கணனிக்காதல் தூவாணம் வழியே"
Post a Comment