கருகிய மொட்டொன்றின் கண்ணீர்கதை
கருகிய மொட்டொன்றின் கண்ணீர்கதை........
பால் மணம் மாறா பருவமதில் பாடாசாலை சென்று துள்ளித்திரியும் வயது அவளுக்கு சக நண்பர்களுடன் விளையாடவும் நேரமில்லை தாய் மடி உறக்கமும் போதவில்லை குடும்ப வறுமை தாண்டவமாட தொழில் தேவதை ஆசையுற்று தன் வழி அழைத்தெடுத்ததால் பூக்காத மொட்டவள் தேவி....!
இயற்கை எழிலுக்கு பெயர் போன ஊர் அது சுற்றுலா பயணிகளும் நாளும் வந்து செல்லும் இடம் அது பல்கலை சமூகமும் செறிந்து வாழும் பகுதி அது ஆரண்யகாண்டம் ஊரின் பெயர்.
குதிரை சவாரிக்கு அழைத்து செல்லும் பணி தேவி உடையது. பிஞ்சு மழழையின் கையில் கடிவாளம் குதிரையின் கழுத்தை அலங்கரித்தது. கடிவாளத்துக்கு தான் கட்டுப்படவில்லை என்பது அந்த குதிரைக்கு மட்டுமே தெரியும்.. அந்த தேன் சிட்டுவி்ன் பால் முகத்திற்கும் அவள் காட்டும் நேசத்திற்கு மாத்திரமே. அந்த ஐந்தறிவு ஜீவன் அடங்கி இருந்தது.
இவ்வாறாக சென்ற அவள் வாழ்கையின் சாராம்சம் எழுத உதயசூரியன் உதயமானான் மொட்டொன்று கருகப்போகும் காலம் பகலவன் அறிந்திருந்தால் உதித்திருக்கமாட்டான் சுடும் சூரியன் மனதிலும் ஈரம் இருந்திருக்கும்.. ஆனால் மிருகத்தின் இனம் சேரகூட தகுதியில்லா மணிதனின் மனதில் இருக்கவில்லை...
வழக்கம்போல் தன் தொழில் நிமிர்த்தம் குதிரையை அழைக்க சென்றாள் தேவி, நடக்கப்போகும் விபரீதம் அறிந்ததோ அந்த குதிரை முரண்டு பிடித்தது குழந்தையின் கையில் காயம் பட கண்ணீர் வடித்த இயத்தோடு அவளின் இறுதி யாத்திரைக்கு தயாரானது..
குதிரை ஒரு புறம் குழந்தை ஒரு புறமாக வீதி வழி சென்றனர்.
திடீரென சினம் கொண்டது காற்று முகில் சூரியன் மறைத்து அரக்கர்களின் அறிகுறி உணர்த்தியது..
திடீரென சினம் கொண்டது காற்று முகில் சூரியன் மறைத்து அரக்கர்களின் அறிகுறி உணர்த்தியது..
மூன்று சக்கர வண்யில் மூன்று மணித மிருகங்கள் அந்த பைங்ககிளிதேவியை தூக்கி சென்றனர்..
பொழுதுமுடிந்தும் மகள் வருகை காணாத பெற்றோர் தேடி அலைந்தனர் ஆரண்யகாண்டம் முழுவதும்.........
நாட்கள் கடந்தன எட்டு நாட்கள் கழித்து வாய்க்கால் ஓரம் அவள் இருந்தாள்.....
நாட்கள் கடந்தன எட்டு நாட்கள் கழித்து வாய்க்கால் ஓரம் அவள் இருந்தாள்.....
ஆனால் அவள் முகத்தில் புண்னகை இல்லை உடல் முழுவதும் புண்ணாக இருந்தது, அவள் உரையாட வில்லை எலும்புகள் உடைந்திருந்தன, அவள் கண் திறக்கவில்லை மாறாக அவள் மூச்சுக்காற்று நுரையீரல் செல்ல மறுத்தது..........................
ஆம், அவள் இறந்திருந்தாள் பிள்ளையாக திரிந்தவள் இன்று பிணமாக கிடக்கிறாள்..
எட்டு நாட்கள் அவள் உணவின்றி கூட்டு வன்புனவிற்கு உட்பட்டு கொலை செய்யப்பட்டாள்...
ஏன் என்றும் தெரியவில்லை காரணம்தான் புரியவில்லை....
பூக்க நினைத்த மொட்டு கருகிப்போனது....
பூக்க நினைத்த மொட்டு கருகிப்போனது....
சம்பவம் கேள்வியுற்ற நீதி தேவதை கண்கட்டிய துணி அவிழ்த்து தன் உடல் மறைத்தாள்....
நாட்கள் கடந்து அந்த குதிரையுடன் இன்னுமொரு மழழை மோணிகா செல்கிறாள்...................................
"என் தூவானம் வழியே தமிழ்சாரல்"
Post a Comment