5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையும் இன்றைய நிலையும்.........
5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையும் இன்றைய நிலையும்.........
எமது கல்விப்போக்கானது இன்னமும் பரீட்சை நோக்கில்தான் தீவிர கவணம் செலுத்திவருகின்றது அதிலும் 5ம் தர புலமை பரீட்சை பெறுபேற்றின் படிதான் மாணவர்களின் கெட்டித்தனமும் பாடசாலைகளின் சிறப்பும் பெற்றோர்களின் கௌரவமும் அளவிடப்படுகின்றதாக கருதுகிறார்கள் இதனால் மாணவர்கள் பாடசாலைகளிலும் சரி வீடுகளிலும் சரி வதைக்கப்படுகிறார்கள்...
5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற தவறுகின்ற மாணவன் வாழ்கையிலே தோற்றவனாக எதற்கும் தகுதி இல்லாதவனாக சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்ற அவல நிலை தொடர்கிறது..
புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி ஆயிரக்கனக்கான ஏழை மாணவர்களின் வாழ்க்கையை வெட்டிப்பந்தாடுகிறது...
5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின்படி அடுத்தடுத்த வகுப்புகளில் மாணவர்கள் வகைப்படுத்தபடுகிறார்கள்
சித்தி பெற்ற மாணவர்கள் ஒரு வகுப்பாகவும் சித்தி பெறாத மாணவர்கள் வேறுவகுப்பாகவும் பிரிக்கப்பட்டு மாணவர்கள் மத்தியில் பிரிவினையை உண்டாக்குகிறது பாடசாலை சமூகம் "ஜாதிகள் இல்லையடி பாப்பா..." என்ற பாரதியின் கூற்று அங்கே கேள்விக்குறியே???
சித்தி பெற்ற மாணவர்கள் ஒரு வகுப்பாகவும் சித்தி பெறாத மாணவர்கள் வேறுவகுப்பாகவும் பிரிக்கப்பட்டு மாணவர்கள் மத்தியில் பிரிவினையை உண்டாக்குகிறது பாடசாலை சமூகம் "ஜாதிகள் இல்லையடி பாப்பா..." என்ற பாரதியின் கூற்று அங்கே கேள்விக்குறியே???
"ஒரு பாடசாலை திறக்கப்படும் போது ஆயிரம் சிறைசாலைகள் மூடப்படுகின்றது" எனும் வாசகம் உள்ளது ஆனால் இன்றைய சூழ்நிலையில் புலமைபரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டால் ஆயிரம் சிறைசாலைகள் திறக்கப்பட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இன்றைய சமூகம் உள்ளது என்பதை மறுக்க முடியாத உண்மை காரணம் சித்தி பெற தவறுகின்ற மாணவர்களுக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் கொடுக்கின்ற தண்டனைகளும் சிறுவர்துஷ்பிரயோக செயற்பாடுகளும் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறிந்த காலம் மலையேறி பக்கத்துவீட்டில் நடப்பதாக உள்ளது.
கடப்பாறைகளாக பாடசாலை செல்லும் மாணவர்கள் குண்டூசிகளாக திரும்பிவருகின்ற நிலை...
"அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கத்தை கடந்து ஓர் வியாபாரச்சரக்காக மாறிவிட்ட இந்த நாட்களில் அதற்கு அப்பாலும் சென்று அம்மாக்களின் பரீட்சையாக அது பரிணமித்துவிட்டதை வேடிக்கை என்று சொல்லவா வேதனை என்று சொல்லவா" என்று தலையில் அடித்துக்கொள்ளும் நிலை இன்று..
பாடசாலை முடிவு மணி ஓலித்ததும் பாடசாலைகளில் மாணவர்கள் விடும் கூச்சல் இன்றைய கல்வி முறைக்கு கிடைத்த மிகப்பாரிய தோல்வியாகும்...
என்னதான் அம்மாக்களின் பரீட்சையாக இது இருந்தாலும் நமது மகன் புலமை பரீட்சையில் தோற்றுவதற்கு முன் அது நிறுத்தப்பட வேண்டும் என இறைவனை மன்றாடும் பெற்றோர் நம்மில் பலர்...
பருவம் அறியா பிஞ்சுகள் பால்வாசம் மாறாத பருவமதில் புற்றுநோய் போல் புலமைபரிசில் பரீட்சை இன்றைய சிறுவர்களுக்கான சாபமே..........!
"என் தூவானத்தின் திறனாய்வு"
Post a Comment