என்னை இன்னும் நியாபகம் இருக்கிறதா?...."தூவானத்தின் பிரிவு துயர்"
என்னை இன்னும் நியாபகம் இருக்கிறதா?
மறதியின் வாடிக்கையாளன் ஆகியதால் என்னை மறந்து விட்டாயா ?
இல்லை
மனதின் நச்சரிப்பால் மறைத்து விட்டாயா?
மனதின் நச்சரிப்பால் மறைத்து விட்டாயா?
எனது குறிப்புகளை தருகிறேன்
நினைவில் நிறுத்த முயன்று பார்....
அலைகடலோரம் இறுக பினைத்த கைகளோடு
உன்னோடு வலம் வந்த நிழல் நான்
பாதிவழியில் பாதை மாறி முகம் மறைத்த உன்னை
நெடுஞ்சாலை கடந்து தரையிறக்கிய
தேரோட்டி நான்
தேரோட்டி நான்
உரையாடல் நீ புரிய
இலவச இனைப்பை வழங்கிய ez-cash நான்
கடைசி வரை உன்னோடு இருப்பேன் என சத்தியம் நீ சொல்ல
கதை கேட்ட விக்கிரமாதித்தன் நான்
வீட்டில் யாரும் இல்லை உடனழைத்ததும் காவலுக்கு விரைந்த காவலன்
நடு இரவிலும் உன் உதடுகளை நச்சரித்த முன்னாள் காதலன்
வேறு ஒருவனை மணமுடிக்க
ஆசை கொண்டு தூதனுப்பிய வேளை
என் மனக்கதவுகளை திறந்து வழி அனுப்பிய கயவன் நான்
ஆசை கொண்டு தூதனுப்பிய வேளை
என் மனக்கதவுகளை திறந்து வழி அனுப்பிய கயவன் நான்
இன்னும் உன் நினைவுகளில் நான் வெளிவரவில்லை எனின்
மண்னித்துவிடு
மற்றைய தகவல்களை என்னால் எழுத்துக்களில் தர இயலாது...........
"தூவானத்தின் பிரிவு துயர்"
Post a Comment