தனிமையை விரும்புகிறேன்....."தூவானத்தின் போலி இது"
தனிமையை விரும்புகிறேன்.....
போலித்தன்மையை முற்றிலுமாக வெறுக்கிறேன்
ஆதலால் யாருமற்ற தனிமையை முழுவதுமாக வேண்டுகிறேன்.....
ஆதலால் யாருமற்ற தனிமையை முழுவதுமாக வேண்டுகிறேன்.....
நுரையிரல் சென்ற நொடி திரும்பி விடுகிறது
என் சுவாசக்காற்று
என் உடலிலுள்ள காரணத்தால் ஒய்வே இல்லாமல்
வெளிவர துடித்துக்கொண்டிருக்கிறது இதயம்....
வெளிவர துடித்துக்கொண்டிருக்கிறது இதயம்....
அடம்பிடிக்கும் குழந்தைபோல
ஒரிடத்தில் நில்லாமல் அங்கும் இங்கும் அலைமோதுகிறது
குருதி கூட்டங்கள்...
ஒரிடத்தில் நில்லாமல் அங்கும் இங்கும் அலைமோதுகிறது
குருதி கூட்டங்கள்...
நான் ஒரு வழி நடக்கையில்.....
தன் வழி அழைக்கிறது கால்கள்
தன் வழி அழைக்கிறது கால்கள்
இரவின் வண்ணத்தில் பாரினை பார்க்க கேட்கிறேன் .......
ஒய்வெடுக்கும் நேரமென்று விழிக்க மறுக்கிறது விழிகள்...
ஒய்வெடுக்கும் நேரமென்று விழிக்க மறுக்கிறது விழிகள்...
ஆகாய நிலவை தொட நினைத்தேன் .....
உயர்த்த முடியாது என்று முட்டுக்கட்டை இடுகிறது கைகள்....
உயர்த்த முடியாது என்று முட்டுக்கட்டை இடுகிறது கைகள்....
அங்கங்களே எனை அவமதிக்கையில்
எனை ஆதிரிக்கும் அன்பை எங்கிருந்து பெறுவேன்.....?
தனிமையின் தாலாட்டில் சில காலம் வாழ்ந்து
ஒய்வழிக்க என்னுகிறேன் என் அங்கங்களுக்கு
"தூவானத்தின் போலி இது"
Post a Comment