உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரம்! கடும் போராட்டத்துடன் உயரம் தொட்ட இலங்கையர்......


உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரம்! கடும் போராட்டத்துடன் உயரம் தொட்ட இலங்கையர்......





இலங்கையை சேர்ந்தவர் ஒருவர் எவரெஸ்ட் மலை ஏறி சாதனை படைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்து.
ஜொஹான் பீரிஸ் என்பவரே நேற்று (2017.05.22)  அதிகாலை 29,029 அடியுடனான உலகின் உயரமான எவரஸ்ட் மலை உச்சியை சென்றடைந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

அதற்கமைய எவரஸ்ட் மலை உச்சியை சென்றடைந்த இரண்டாவது இலங்கையராக அவர் காணப்படுகின்றார்.
நேபாள நேரத்தில் நேற்று காலை 5.55 மணியளவில் அவர் எவரஸ்ட் மலையை சென்றடைந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டு ஜொஹான் பீரிஸ் என்பவரினால் எவரஸ்ட் மலை ஏற முயற்சித்த போதிலும், மலை உச்சிக்கு 400 மீற்றர் தூரத்தில் அவரது ஒஸ்சிஜன் தொட்டி முடிந்தமையினால் அவர் தனது எதிர்பார்ப்பை கைவிட்டார்.

அதற்கமைய இந்த வருடமும் அவர் தனது பயணத்தை ஆரம்பித்து வெற்றியடைந்துள்ளார். அவ்வாறு எவரெஸ்ட் மலை ஏறி சாதனை படைத்த ஜொஹான் பீரிஸிற்கு எமது வாழ்த்தினை தெரிவித்து கொள்கின்றோம்.

எவரெஸ்ட் பற்றி.....

எவரெஸ்ட் நேபாளத்தில் சாகர்மா என்றும், சீனாவில் சோமோலுங்குமா என்றும் அழைக்கப்படுகிறது.இது உலகிலேயே மிக உயர்ந்த மலையாகும்.



இது கடல் மட்டத்திலிருந்து 8,848 மீட்டர் (29,029 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.இமயமலையின் மஹாலங்கூர் மலைத்தொடரில் இந்த எவரெஸ்ட் மலை அமைந்து உள்ளது.

பூமியின் மையத்தில் இருந்து அளக்கப்பட்டால், 5 வது உயரமான மலை ஆகும்.

இது இமயமலையின் பிரிவில் அமைந்துள்ளது.சீனா மற்றும் நேபாளம் இடையேயான சர்வதேச எல்லையானது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ளது.

அதன் மேல்பகுதியில் அண்டை சிகரங்கள் இலோட்ஃசே மலை, 8,516 மீ (27,940 அடி); நபுட்சே, 7,855 மீ (25,771 அடி), மற்றும் சாங்சே, 7,580 மீ (24,870 அடி) ஆகும்.

1856 ஆம் ஆண்டில், இந்தியாவின் கிரேட் டிரிகோனெமெட்டிகல் சர்வே ஆஃப் இந்தியா எவரெஸ்ட்டின் உயரத்தை முதலில் வெளியிடப்பட்டது.

பின்னர் பீக் XV என அழைக்கப்பட்டு, 8,840 மீ (29,002 அடி) என நிறுவியது.

சீனா மற்றும் நேபாளால் அங்கீகரிக்கப்பட்ட தற்போதைய அதிகாரபூர்வ உயரம் 8,848 மீ (29,029 அடி) 1955 ஆம் ஆண்டு இந்திய ஆய்வின் மூலம் இது நிறுவப்பட்டது.

பின்னர் 1975 ஆம் ஆண்டு சீன ஆய்வு ஒன்றால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டில், சீனா மலை உயரத்தை 8844.43 மீட்டர் என அளந்தது.

சீனாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் எவரெஸ்டின் உயரம் பற்றிய வாதம் 2005 முதல் 2010 வரை ஐந்து ஆண்டுகள் நீடித்துள்ளது.

சீனா மலையின் உயரத்தை பாறையின் உயரம்வரை 8,844 மீட்டர் உயரம் என்று வாதிட்டது.

ஆனால் நேபாளம் அதன் பனி உயரம் 8,848 மீட்டர் என்ற அளவே சரி என்றது.
2010 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் உயரம் 8,848 மீ என்று இரு தரப்பினரிடனும் ஒரு உடன்பாடு ஏற்பட்டது.

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,844 மீ என சீனாவின் கூற்றை நேபாளம் அங்கீகரிக்கிறது.


இந்திய பிரிட்டிஷ் சர்வேயர் ஜெனரல் ஆண்ட்ரூ வாவ் ஒரு பரிந்துரையின் பேரில், 1865 ஆம் ஆண்டில், எவரெஸ்ட் என்ற அதிகாரப்பூர்வ ஆங்கில பெயரை ராயல் புவியியல் சமூகம் வழங்கியது.


"தூவானத்தின் பாராட்டு"

No comments