கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய செய்தி.....ஏ.பி.டி வில்லியர்ஸ் ஓய்வை அறிவித்தார்.

கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய செய்தி




கிரிக்கட் உலகின் ஜாம்பவான் ரசிகர்களால் mr.  360• செல்லமாக அழைக்கப்படும் தென்னாபிரிக்க வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் இன்று (2018.05.23) அவருடைய ஓய்வை அறிவித்தார்.

கிரிக்கெட்டில் நாலாபக்கமும் பந்தை சிதறடிப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

தென்னாபிரிக்காவின் அனித்தலைவராகவும் சில காலம் பதவி வகித்த இவர். உலக கிண்ண தோல்வியை பொறுப்பேற்று பதவி விலகினார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 9577 ஓட்டங்களையும்
டெஸ்ட் போட்டிகளில் 8765
T20 போட்டிகளில் 1672 ஓட்டங்களையும் 47 சதங்களையும்   109 அரைச்சதங்களையும்   விளாசியுள்ளார்.


மிக வேகமான 50,100 மற்றும் 150  ஓட்ட பிரதிக்கும் சொந்தமானவர்.
தென்னாபிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமான டெஸ்ட்  சதத்திற்கும் முறையடிக்கப்படாத சாதனையாளராக உள்ளார்.

கிரிக்கெட்டில் துடுப்பாட்ட வீரராக மட்டுமல்லாமல் சிறந்த விக்கட்காப்பாளராக களத்தடுப்பாளராக பந்துவீச்சாளராக சகல துறைகளிலும் தனக்கு நிகர் தான் மட்டுமே என நிறுபித்த வீரர்.

கிரிக்கெட் மட்டுமில்லாமல் தென்னாபிரிக்க ரக்பி குழாத்திலும் நீச்சல் உதைபந்தாட்டம் பாடல் இசை நடணம் என சகல  கலைகளிலும் புகழ் பூத்த சகலகலாவல்லவன்.


இவருடைய ஓய்வு இவரின் ரசிகர்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சோகத்தையே தந்துள்ளது.
இந்த நூற்றான்டின் தலைசிறந்த வீரர் மட்டுமல்ல தலைசிறந்த மணிதன்....

"தூவானத்தின் செய்திகள்"

No comments