மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கும் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் சமரில் வென்றது யார்?

மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கும் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் சமரில் வென்றது யார்?



BATTEL  OF THE EVEREST என்று வர்ணிக்கப்டும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கும் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையிலான  மாபெரும் கிரிக்கெட் போட்டியானது 8வது முறையாக  இன்று (2018.05.26) மட்டக்களப்பு சிவாணந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் மாணவர்களின் உற்சாகத்துடன் ஆரம்பமானது.


நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற பெரியகல்லாறு மத்திய  கல்லூரி அணித்தலைவர் R. தனுஸ் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.
அதன் படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 174 ஓட்டங்களை குவித்தது.

மதியபோசன இடைவேளையின் பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய M. சாருஷன் தலையிலான மட்/இந்துக்கல்லூரி துடுப்பாட்ட வீர்களால் பெரியகல்லாறு மத்திய கல்லூரி பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியவில்லை..
அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தப்ப்ட 103 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்துக்கல்லூரி
72 ஓட்டங்களால் வெற்றியீட்டி
2018ம் ஆண்டுக்கான BATTEL  OF THE EVEREST ஆக வெற்றிவாகை சூடியது பெரியகல்லாறு மத்திய கல்லூரி.






"வாழ்த்துக்கள்........."


"தூவானத்தின் வாழ்த்து..."

No comments