இன்றைய உலகம்....

இன்றைய உலகம்...........!






என் பேனா முனைகள் வடிப்பது
எழுத்துக்களையல்ல
கண்ணீர்த்துளிகளை...
மதுவென்றும் மாதென்றும்
மதிமயங்கிச் சீரழியும்
கேவலங்கள் நீங்க வேண்டும்.
பச்சிளம் சிறுமியையும்
பலியெடுக்கும் காமுகன்களால்
பரிதவிக்கின்றது என் தேசம்.
தத்தித்தத்தி நடை பயிலும்
சுட்டிப்பிள்ளை கண்ட போதும்
எட்டிப்பார்க்கும் கோரக்கண்கள்
தட்டிக்கேட்க யாருமுண்டோ?
எண்ணிடவும் முடியாத
அவலங்கள் கொடுமைகள்
கண்முன்னே காண்கையிலே
கதறியழும் என் உள்ளம்.
சட்டங்கள் பல இருந்துமென்ன
குற்றங்கள் இங்கே குறையவில்லை.
தண்டிக்க யாரும் தேவையில்லை
உன் மனசாட்சி ஒன்றே போதும்.
இறைவன் என்ற நீதிபதியின்
தீர்ப்பு ஒரு நாள் உன்னைத்தேடும்
அன்று வருந்தியழுதல் பயனோ
இன்றே திருந்தி வாழ்தல் நலமே.


"என் தூவானம் வழியே தமிழ்சாரல்"

No comments