உலகத்தமிழர் வரலாற்றில் கருப்பு நாள்... இரத்தக்கரைகளில் ஊறியது நினைவுள்ளதா???
மே 18
வாய்க்கால் ஓரம் ஓர் இனம்
வதைக்கப்பட்ட கறுப்புச் சரித்திரம்
இரத்தக்கரையும் உதிரம் கண்டு
மூச்சிழந்த -நாள் இன்று
வதைக்கப்பட்ட கறுப்புச் சரித்திரம்
இரத்தக்கரையும் உதிரம் கண்டு
மூச்சிழந்த -நாள் இன்று
பால்மனம் மாறா மழழைகள் முதல்
பருவக் கண்ணிகள் சகிதம்
உடல் புசிக்கப்பட்டு உயிர் புதைக்கப்பட்ட - நாள் இன்று
பருவக் கண்ணிகள் சகிதம்
உடல் புசிக்கப்பட்டு உயிர் புதைக்கப்பட்ட - நாள் இன்று
தாய் நாட்டில் தன்மானத்திற்காய் போர் புரிந்தும்
தன் மாணத்தை கூட காக்க முடியாமல்
முள்ளிவாய்க்காலில் முற்றுபெறா சடலங்களாக
தன் மாணத்தை கூட காக்க முடியாமல்
முள்ளிவாய்க்காலில் முற்றுபெறா சடலங்களாக
என் உறவுகளை பொறுக்கிய -நாள் இன்று
காலச் சுவடுகளில் வீரத்தால் வீழ்ந்தவன் அல்ல
தமிழன் துரோக்கதால் மாண்டவன் என
சரித்திரம் பறைசாற்றும் - நாள் இன்று
யுத்தம் முடிந்து வருடம் பல கடந்தும்
அன்றைய போராளிகள் இன்னும்
அன்றைய போராளிகள் இன்னும்
போர் கைதிகளாக சிறைவாசம் செய்ய காரணம் என்ன?
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வீதிகளில்
வருடம் கடந்தும் காந்திவழியில்......
போர்க்கொடி பிடித்த காரணம்
போர்க்கொடி பிடித்த காரணம்
நிலைநாட்டப்படுகிறது தீர்விலா கோரிக்கைகளால்...
முப்படை கட்டியாண்ட தமிழினம்
ஓன்று கூடி நினைவு கொள்ள முடியாமல் முழிக்க காரணம்...
உழைக்கும் தொழில் வர்க்த்திற்கு தன் நாள் தந்த "மே"
என் உறவுகளுக்கு நினைவு நாள் தந்தது ஏனோ?
என் உறவுகளுக்கு நினைவு நாள் தந்தது ஏனோ?
உலகத்தமிழர் வரலாற்றில் கருப்பு நாள்
"என் தூவானத்தின் கண்ணீர்தூளி"
Post a Comment