அனுகுண்டை தாங்கும் வல்லமை படைத்த எமக்கு அனுகிவரும் துரோகத்தை ஊகிக்கும் உணர்வு இல்லை.....

மே 18


குண்டு மழைக்கு கைகளால் குடைபிடடித்து
இரத்த வெள்ளத்தில் படகோட்டிய இனம் நாம்..

பீரங்கி சத்தங்களும் தோட்டாக்களின் இரைச்சல்களும் 
என் இன மழழைகளின் தாலாட்டு

எதிரிகள் கூட்டு சேர்ந்து சுற்றிவளைத்த போதும் 
சக்கரவீயூகம் அமைத்து சரித்திரம் போற்றிய மாவீரர் நாம்

அனுகுண்டை தாங்கும் வல்லமை படைத்த எமக்கு 
அனுகிவரும் துரோகத்தை ஊகிக்கும் உணர்வு இல்லை.....

உடமைகளளோடு பாதி வழி 
உறவுகளோடு மீதி வழி 
உயிரோடு மட்டும் இறுதி வழியில் மீண்டோம்

பிணங்களை தாண்டி இடம்பெயர்கையில் 
அங்கத்தை விட்டு பிரிந்தது ஒவ்வொரு அங்கமாக

காட்டின் வழியும் வேங்கையின் வீச்சமும் 
உடனிருந்த எட்டபர்களால் காட்டி குடுக்க
உறவென நினைத்த அன்டை நாடுகளும் 
நரி குணம் கொன்டு திட்டம் வகுக்க
வீரத்தால் வீழ்ந்தவன் அல்ல துரோகத்தால் மாண்டவன் என 
சரித்திரம் மறுபடி உணர்த்தியது தமிழனின் சாபத்தை

கடத்தப்பட்டவர்களையே காணமல் ஆக்கப்பட்டவர்கள் என 
மறுபெயர் சூட்டி வடுக்களை 
வடை கதையாக மறைத்தாலும்....

ஆயுதங்கள் வீழ்ந்ததே தவிர ஆன்ம இலட்சியங்கள் வீழவில்லை
"கடைசி தமிழனின் இரத்தம் எழும் வீழாதே"


நினைவுகொள் பேரினவாதமே......


"என் தூவானத்தின் இரத்த தூளி இது"

No comments