யார் அவள்

அவள்.........!


அடுப்பங்கரை ஒரம்
அச்சிவார்த்த பலகை மேல்
கரும்புகையும் கண் கசக்க
நெற்றி வியர்வை உதடு ருசிக்க
தலைவிரி கோலமாய் அமர்ந்திருந்தாள்               - அவள்


மூட்டைப் பூச்சிகளும்
மூக்கை மூடிச்செல்லும் நாற்றம்
நேற்றைய சமையல் பாத்திரங்கள்
அடுப்பங்கரையின் அக்கரைப்பக்கம்
பொழுது புலர்ந்து நாழிகை கூட
கழியவில்லை
சமையலில் ஆரவாரம் செய்யும்                          - யார் அவள்

உள்நாட்டு யுத்தம் ஊனப்படுத்த......
கணவன் படுத்த படுக்கை
ஏழை அவளுக்கு மூன்று மகள்கள்
அன்றாட தேவைக்கு அரிசி ஆலை வேலை
குடும்பச் சுமை தோழேற்றிய                              - பெண் அவள்



தனி நாடு கேட்டு போர் புரிந்தும்
தனி மணித வாழ்க்கை கேள்விக்குரியாய்???
அன்றைய போராளி குடும்பம்
தனி ஒரு மணிதனுக்கு உணவில்லையேல்!
 இந்த ஜகத்தினை அழித்திடுவோம்  -பாரதி
தண்னீரே பல நாள் உணவு                            - அவள் திருமதி பாரதி


"என் தூவானம் வழியே தமிழ்சாரல்"

No comments