ஆருயிர் மனைவியின் ஆதங்கம் இது...!

வெளிநாட்டு கணவனே...........



ஆருயிர் மனைவியின்
ஆதங்கம் இது...!



இரு வருடத்தில் ஒரு மாத விடுமுறை
மூன்று நாட்கள் விலக்கென்று தனி அறையிலும்
மீதி நாட்களின் மயக்கத்தில் உன் மார்பின் மடியிலும்
ஏனைய நாட்கள் தலையனை பிடியிலும் என் வாழ்க்கை.......

வெளிநாட்டு மாப்பிள்ளை..........
பெயர் மட்டும் எதற்கு
குளிரிலும் மழையிலும் வெயிலிலும் பகலிலும் இரவிலும் 
இம்மையின் மறுமையிலும்
என் ஏக்கம் போக்க முடியா கயவன் நீ!

வீதியில் தனிமையில் எனது பயனத்தைக்கூட 
சில வெறிபிடித்த நாய்கள் குரைத்து தடுக்கிறது....!

எண்ணிலடங்கா சீதணம் என் தந்தை உனக்கு தந்தும்
தனிமையை மட்டும் எனக்கு பரிசாக அளித்ததன் காரணம் என்ன?

வாசனை பொருட்களும் பட்டுச் சேலைகளும் பெட்டி நிறைய வந்தும் பயணில்லை
என் அழகிற்கு உரியவன் உடன்னில்லாத நாட்களில்.....!

என் நினைவுகளை அணுமதிக்கப்பட்ட நிறையிலும் கூடியதால் விமான நிலையத்திலேயே விட்டுச்செல்கிறாய்!

இனி வரும் முறையில்
விசா இரத்து செய்து விட்டு வா
இல்லையேல் என்னை விவாகரத்து செய்து விட்டு போ...!
"என் தூவானம் வழி தழிச்சாரல்"

No comments