எண்ணங்களில் உயர்வு வேண்டும் ....சிறுகதை......
"எண்ணங்களில் உயர்வு வேண்டும்"
சிறுகதை......
வறுமைக்கு உருவம் கொடுத்தால் அது அந்த சிறுவனை போலவே இருக்கும். உடலோடு ஒட்டிய வயிறு எலும்போடு ஒட்டிய தேகம் இதுவே அவனது கட்டமைப்பு.
உற்றார் உறவினர் பெற்றோர் யாருடைய ஆதரவும் இல்லாதவன் அவன்.. எனினும் தன் உணர்வு பகிரவும் பாசத்தில் பங்கெடு்க்கவும் ஒரு உறவு அவனது தம்பி..
எதுவும் இல்லாத அவனுக்கு பசி மட்டும் நேரம் தவறாமல் வந்துவிடும் ஆனால் காலம் சென்றும் திரும்புவதில்லை.....
வறுமைக்கு தன்னை வளர்பு மகனாக தாரைவார்த்த அவன் காந்தன்..
வீதிகளில் நிற்கும் வாகனங்களை கழுவி கொடுத்து தன் வயிற்றையும் தம்பியின் வயிற்றையும் கழுவி கொள்ளும் தொழில் அவனுக்கு....
அவ்வாறான ஒரு நாளில் ஒரு ஆடம்பரபரமான கார் அவனுக்கு வாடிக்கைக்காக வந்தது. இதுவரையில் அப்படி ஒரு காரை அவன் பார்த்தது இல்லை அவனுக்கு அது வேடிக்கையாகவே இருந்தது.
அந்த காரில் இருந்து இறங்கிய இளைஞன்.... மிகவும் ஆடம்பரமாகவே இருந்தான்.. காந்தனுக்கு அந்த காரை கழுவும் வாய்ப்பை கொடுத்தான் அந்த இளைஞன்..
காரை கழுவும் போது காந்தனின் முகத்தில் இருந்த பூரிப்பையும் ஆச்சரியத்ததையும் கவணித்த அந்த இளைஞன்
காந்தனின் அருகில் சென்று
"தம்பி ஏன் இந்தக்காரை இப்படி பார்க்கிறாய்
இந்ந கார் எனக்கு எனது அண்ணன் பரிசளித்து......
இவ்வாறான ஒரு அண்ணன் உனக்கும் இருந்திருக்கலாம் என்று என்னுகிறாயா?"
என்று வினாவினான்.
தலையை சற்று உயர்த்தி மெல்லிய புண்ணகையுடன்
"இல்லை ஐயா! அந்த அண்ணனாகவே நான் இருக்க விரும்புகிறேன்" என்றான்..
பதிலை கேட்ட அந்த இளைஞன் எதுவும் பேசாமல். காரில் ஏறி சென்றுவிட்டான்..
காந்தனும் திரும்பி தன் தொழிலில் கவணம் செலுத்தினான்
ஆனால் அந்த இளைஞனின் மனதில் ஒன்று மட்டும் நிலைநிறுவியது.
காந்தனின் உயர்ந்த எண்ணம் ஒருநாள் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்வது திண்ணமே!
"தூவானத்தின் சிறுகதைச் சாரல்."
Post a Comment