கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உலககிண்ணம் பற்றி தெரியுமா?

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உலககிண்ணம் பற்றி தெரியுமா?



இன்னும் சிறிது நாட்களில் ஆரம்பமாகவுள்ள உலகின் அதிகூடிய இரசிகர்களை கொண்ட கால்பந்தாட்ட உலககிண்ணம் தொடர்பில் நாளும் ஒரு செய்தியை கேள்விபடுகிறோம்.

பிஃபா உலககிண்ணம் பல்வேறு விதமான வரலாறுகளை கொண்டது. ஒரு அணிக்கு சொந்தமான உலககிண்ணம் கடத்தப்பட்டு இன்று வரையில் கிடைக்கவில்லை என்றால் நம்ப முடிகிறதா?

ஆம் அதுவே உண்மை....


மெக்சிகோவில் நடந்த 1970ஆம் ஆண்டு உலகக் கிண்ணமானது வட அமெரிக்காவில் இடம்பெற்ற முதல் உலகக் கிண்ணமாகும்.


முந்தைய உலகக் கிண்ண போட்டியில் தாம் இலக்கு வைத்து எதிரணிகளால் தடுக்கப்பட்டதால் 1970 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதை ஆரம்பத்தில் மறுத்த பீலே, தகுதிகாண் போட்டிகளில் அணிக்கு திரும்பி பின்னர் திறமையை வெளிப்படுத்தினார். இத்தாலியுடனான இறுதிப் போட்டியில் 4-1 என பிரேசில் வென்று உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறை தன்வசமாக்கியது. 

இந்த இலக்கை எட்டியதால் பிரேசில் அணிக்கு ஜுல்ஸ் ரிமெட் கிண்ணம் நிரந்தரமாக சொந்தமானது. ரியோ டி ஜெனிரோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்தக் கிண்ணம் 1983ஆம் ஆண்டு களவாடப்பட்டு கடைசி வரை கிடைக்கவே இல்லை.
இது உலககிண்ண வரலாற்றில் ஒரு கரும் புள்ளி.....!





பிஃபா உலக கிண்ண வரலாற்றை அறிய இங்கே க்ளிக் செய்யவும்፨༒
http://thuvaanams.blogspot.com/2018/05/blog-post_29.html?m=1


"தூவானத்தின் தேடல் துளி"

No comments