இது ஒரு கரியவனின் கவிதை இருப்பினும் வர்ணம் தடவிய உதடுகளும் வாசிக்கலாம்......


கறுப்பு காதலுக்கு தடையா..???



இது ஒரு கரியவனின் கவிதை
இருப்பினும் வர்ணம் தடவிய உதடுகளும் வாசிக்கலாம்......


 காதலித்தவளே என்னை நிறத்தை காட்டி நிராகரித்தாள்
கருப்பானவன் எனக்கு நிகர் இல்லை என்று....

தலை முடியில் வெண்மையை நீ விரும்பவில்லை
 கருவிழியின் துனையால் ரசனை பெற்றாய்

கார்மேகத்தின் தூறல்களில் நனைய நினைத்தாய்
ஆடைகளிலும் கறுப்பையே தேர்வு செய்தாய்

புருவ மத்தியிலும் கரு நிற பொட்டிற்கே இடமளித்தாய்
பாதனியிலும் அவ்வாறே அணிந்து கொண்டாய்


பிடித்த நிறங்களில் முன்னுரிமை தந்தாய்
கண்ணாடியிலும் காதனயிலும் அதையே செய்தாய்

கண்னனையே கடவுளாக கொண்டாய்
கருப்பாய் இருந்ததால் எனை வார்தையால் கொண்றாய்

இத்தனையும் உனக்கு பொருந்துகையில்
நான் மட்டும் ஏனடி...........................



கறுப்பானவர்கள் அழகற்றவர்கள் அல்ல
வண்ணமிடப்படாத ஓவியங்கள்


"தூவானத்தின் கரு தூறல்"

No comments