வரலாற்றில் இன்று--ஜூன்12


வரலாற்றில் இன்று--ஜூன்12


1665: முன்னாள் டச்சு குடியேற்ற பிரதேசமாக இருந்த நியூயோர்க்கில் மாநகர நிர்வாகத்தை இங்கிலாந்து  ஏற்படுத்தியது.

1889: வட அயர்லாந்தில்  இடம்பெற்ற ரயில் விபத்தினால் 78 பேர் பலி.

1898: ஸ்பெய்னிடமிருந்து பிரிந்து பிலிப்பைன்ஸ் சுதந்திர பிரகடனம் செய்தது.

1943: உக்ரேனில் ஜேர்மனிய படைகளல் 1180 யூதர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

1964: தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

1975: இந்திய பிரதமர் இந்திரா காந்தி ஊழல் வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டார்.

1991: மட்டக்களப்பில்; 152 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

1991: ரஷ்ய ஜனாதிபதியாக பொரிஸ் யெல்ட்சின் பதவியேற்றார்.

1994: போயிங் 777 விமானம் முதல் தடவையாக பறந்தது.




"தூவானத்தின் வரலாற்றுத்துளி"

No comments