வரலாற்றில் இன்று --ஜூன்17


வரலாற்றில் இன்று --ஜூன்17



1631: முகலாய மன்னன் சாஜகானின் மனைவி மும்தாஜ்மஹால் பிரசவத்தின்போது இறந்தார். அவரின் நினைவாக தாஜ்மஹாலை சாஜகான் நிர்மாணித்தமை குறிப்பிடத்தக்கது.

1940: பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட பெரும்பகுதியை ஜேர்மன் படைகள் கைப்பற்றியதையடுத்து நேசநாடுகளின் படைகள் பிரான்ஸிலிருந்து வெளியேறத் தொடங்கின.

1944: டென்மார்க்கிலிருந்து பிரிவதாக ஐஸ்லாந்து சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1948: அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் 48 பேர் பலி.
1953: பெர்லினில் கிழக்கு ஜெர்மனி அரசுக்கெதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம், சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1954: குவாத்தமாலாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1987: மாலைநேர கடல் குருவியினத்தின் கடைசிக் குருவி இறந்ததில் அவ்வினம் முற்றாக அழிந்தது.
1992: அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷும் ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சினும் அணுவாயுத குறைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
1994: தனது மனைவியையும் அவரின் நண்பரையும் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட அமெரிக்க றக்பி நட்சத்திரமான ஓ.ஜே.சிம்;ப்ஸனை நீண்டநேர கார் துரத்தலுக்குப் பின் பொலிஸார்கைது செய்தனர். இக்கார் துரத்தல் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.

No comments