வரலாற்றில் இன்று --ஜூன் 4

வரலாற்றில் இன்று --ஜூன் 4




கிமு 780 – முதலாவது சூரிய கிரகணம் சீனாவில் பதியப்பட்டது.

1039 – மூன்றாம் ஹென்றி புனித ரோமப் பேரரசன் ஆனான்.

1584 – சேர் வால்ட்டர் ரேலி முதலாவது ஆங்கிலக் குடியேற்றத்தை வட கரோலினாவின் ரோனோக் தீவில் அமைத்தார்.

1615 – சப்பானில் தொக்குகாவா லெயாசு தலைமையிலான படைகள் ஒசாக்கா கோட்டையைக் கைப்பற்றின.
1707 – யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டம் ஒல்லாந்தரினால் அமுல்படுத்தப்பட்டது.

1794 – பிரித்தானியப் படைகள் ஹெயிட்டியில் போர்ட்-ஓ-பிரின்ஸ் துறைமுகத்தைக் கைப்பற்றினர்.

1876 – டிரான்ஸ்கொன்டினென்டல் எக்சுபிரசு என்ற தொடர்வண்டி நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோவை 83 மணி 39 நிமிடங்களில் முதலாவது கண்டங்களிடை தொடருந்துப் பாதை வழியே சென்றடைந்தது.

1878 – உதுமானியப் பேரரசு சைப்பிரசை ஐக்கிய இராச்சியத்துக்கு கொடுத்தது.

1896: பெற்றோலில் இயங்கும் தனது வாகனத்தின் முதல் சோதனை ஓட்டத்தை ஹென்ரி போர்ட் வெற்றிகரமாக நடத்தினார்.

1896 – ஹென்றி ஃபோர்ட் பெற்றோலில் இயங்கும் தனது முதலாவது தானுந்தை வெற்றிகரமாகச் சோதித்தார்.

1912 – மாசச்சூசெட்ஸ் மிகக்குறைந்த ஊழியத் தொகையை நிர்ணயம் செய்த முதலாவது அமெரிக்க மாநிலமானது.

1917 – முதலாவது புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டன.

  1919 – பெண்களின் உரிமைகள்: பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டமூலத்துக்கு அமெரிக்க சட்டமன்றம் அனுமதி அளித்தது.

1920 – பாரிசில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு ஒன்றின் படி அங்கேரி தனது 71% நிலத்தையும், 63% மக்களையும் இழந்தது.

1928 – சீனக் குடியரசின் அரசுத் தலைவர் சாங் சுவோலின் சப்பானியக் கையாள் ஒருவனினால் படுகொலை செய்யப்பட்டார்.

1939 – பெரும் இன அழிப்பு: 963 யூத அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஐக்கிய அமெரிக்காவினால் திருப்பி அனுப்பப்பட்டது. இந்த அகதிகளில் 200 பேர் வரை பின்னர் ஜெர்மனியின் நாசி வதைமுகாமில் சிறைவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் டன்கேர்க் என்ற இடத்தில் இருந்த 300,000 பிரித்தானியப் படைகள் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டனர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மானியப் படைகள் பாரிஸ் நகரைனுள் நுழைந்தனர்.

1943 – ஆர்ஜெண்டீனாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் ரமோன் கஸ்டீல்லோ பதவியிழந்தார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கக் கடற்படையினர் செருமானிய நீர்மூழ்கிக் கப்பல் யூ-505 ஐக் கைப்பற்றினர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: ரோம் நகரம் நேச அணிகளிடம் வீழ்ந்தது.

1946 – எஸ். பி. பாலசுப்ரமணியம், இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் பிறந்தார்.

1957 – மார்ட்டின் லூதர் கிங் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் “அறப்போராட்டத்தின் வலிமை” என்ற தனது உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.

1961 – அமெரிக்கா, பிரித்தானியா, மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் கிழக்கு பெர்லினுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு தாம் கிழக்கு செருமனி உடன் ஒப்பந்தம் செய்யப்போவதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் வியன்னா மாநாட்டில் எச்சரித்தார்.

1970 – தொங்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

1979 – கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் ஜெனரல் ஆச்சியாம்பொங் பதவியிறக்கப்பட்டு ஜெரி ரோலிங்க்ஸ் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.

1987 – பூமாலை நடவடிக்கை: இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட வான்பரப்பில் அத்து மீறி உள்நுழைந்த இந்திய வான்படை விமானங்கள் யாழ் குடாநாட்டின் மீது உணவுப் பொதிகளை வீசியது.

1988 – சோவியத் ஒன்றியத்தில் கசக்ஸ்தான் நோக்கிச் சென்ற தொடருந்து வெடித்ததில் 91 பேர் கொல்லப்பட்டனர். 1,500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. பல மாணவர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1989 – போலந்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சொலிடாரிட்டி இயக்கத்தின் வெற்றி கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்துக்கு எதிரான புரட்சியைக் கிளறியது.

1989 – உருசியாவில் இரண்டு தொடருந்துகள் இயற்கை எரிவளிமக் குழாய் ஒன்றைக் கடக்கையில் ஏற்பட்ட விபத்தில் 575 பேர் கொல்லப்பட்டனர்.

2001 – அரச மாளிகையில் சூன் 1 இல் இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து ஞானேந்திரா நேபாளத்தின் மன்னராக முடி சூடினார்.

வரலாற்றில் இன்று --ஜூன் 3👇👇👇

http://thuvaanams.blogspot.com/2018/06/3.html?m=1


"தூவானத்தின் வரலாற்றுத்துளி"

No comments