நவீன சாதனங்களின் மறைமுக உண்மை....
நவீன சாதனங்களின் மறைமுக உண்மை....
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி... பொதுவாக நவீனமான இந்த காலப்பகுதியில் நவீன சாதனங்களின் பயன்பாடு தெரியாமல் தவறான பாதைக்கு சென்றுவிடுகின்றனர்.
ஏற்கனவே அழிக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை மீள் பெற முடியாதவாறு அழிக்கலாமா? நூற்றுக்கு 90 சதவீதமானவற்றை அழிக்க முடியும். இதற்காக பல வழிகளை மேற்கொள்ள வேண்டும். நீங்களே பல நேரத்தில் அவதானித்திருப்பீர்கள், ஒரு Memory Card யினை Format செய்யும் போது அதனுடைய Capacity Size (கொள்ளளவு) குறைந்து கொண்டே செல்லும். காரணம் என்னவென்றால், ஏற்கனவே அந்த Memory யில் உள்ள Data களானது தற்காலிகமாக ஒரு இடத்தை Memory யில் பிடித்து சேமிக்கின்றது. அதன் விளைவாகவே இவ்வாறு ஏற்படுகின்றது. கடைசியாக அனைத்தையும் Delete செய்யும் போது தகவலானது இவ்வாறு ஓர் இடத்தில் படிகின்றது. இத்தகவல்களை Recovery Software உடன் மீள பெற முயற்சிக்கும் போது கடைசியாக அல்லது அதற்கு முதல் மேற்கொண்ட Format யின் போது ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து தகவல்களை பெற முயற்சித்து பெற்று தரும். இவ்வாறாகவே Recovery செயற்பாடுகள் அமைகின்றது. இதனைத் தடுக்க ஒரே வழி, ஒரு 2GB Memory Card ஐ எடுத்துக் கொள்வோம். இதனை முற்றாக Delete செய்து பின்பு Format செய்து கொள்ள வேண்டும். பின்னர், அந்த Memory Card யில் தேவையில்லாத Videos, Pictures, Songs போன்றவற்றை அந்த Momery Card யினுள் இட்டு முழுமையாகக அந்த Memory யினை நிரப்பி, மீண்டும் அனைத்தயும் Delete செய்து பின்னர் Format செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று அல்லது நான்கு தடவைகள் செய்வதன் மூலம் Recovery செய்யும் போது உங்களுடைய பழைய Memory யில் இருக்கக்கூடிய தகவல்களை பெறாமல் செய்ய முடியும். கடைசியாக நாம் Memory யினுள் பதிவேற்றிய தகவல்களை மாத்திரமே Recovery யின் போது காட்டும்..
பாவித்த மொபைல்களை வாங்கும் போது சில விடயங்கள் கட்டாயம் வேண்டும்.
தற்போது பெரும்பாலனனவர்கள் பாவிக்கக்கூடிய கூடிய ஓரே சாதனம் Smart Phones. இதில் என்னிலடங்கா நன்மைகள் காணப்பட்டாலும் அதே அளவு தீமைகளும் காணப்படுகின்றது. Google நிறுவனத்தினால் வெளிடப்பட்டு இருக்கும் Android Operating System யினை வைத்துதான் அனைத்து விதாமான சாதனங்களும் இயங்குகின்றன. ஒரு மொபைலில் ஒரு Application யினை பதிவதற்கு கட்டாயம் அந்த Application ஆனது Android யின் விதிமுறைகளுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே Install செய்ய அனுமதிக்கும். அவ்வாறு விதிமுறைகளுக்கு அமையாத பல Applications தற்போது வலம் வருகின்றன. இதனை மொபைலில் Install செய்யும் போது அது அனுமதியளிக்காது. இச்சயமத்தில்தான் பல பேர் ROOT எனப்படக்கூடிய விடயத்தினை மேற்கொள்கின்றனர். Root என்பது Android யின் கட்டுப்பாட்டில் இருக்கும் மொபைலை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாகும். இவ்வாறு கொண்டுவருவதால் அந்த மொபைலினை வைத்து பல விடயங்களை மெற்கொள்ளலாம்.
1. தன்னுடைய மொபைலில் கண்கானிகக்கக்கூடிய Applications களை Install செய்து பொனிலிருநதே மறைத்து விடலாம். இந்த Applications கள் மொபைலை Format செய்தாலும் அழைியாது . இது மறைவாக இருந்து கொண்டு Phone யில் Type செய்யக்கூடிய அனைத்தையும் அந்த Application ஐ வைத்தவருக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். இந்த மாதிரியான Application களை Mobileலில் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இதன் காரணத்தினால் பாவித்த Phone களை வாங்கும் பொது மிகவும் இது மாதிரியான விடயங்களை கவனத்தில் எடுக்கவும்.
2. பல பேர் Root செய்து பல விடயங்களை செய்து கொண்டிருப்பர். ஆனால் Root யினை மேற்கொள்ளும் போது மூன்றாம் நபரின் Software யின் உதவியோடுதான் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் போதும் பல Root Softawe தயாரிப்பாளர்களே கண்கானிப்பு software களை Phone யில் பதிந்து விடுகின்றனர். இது தெரியாமல் பல பேர் Rooted Mobile யில் பல வசதிகளை அனுபவத்துக் கொண்டிருக்கின்றனர்.
3. IMO, Wechat பொன்றவற்றினை ROOT யின் உதவியோடு ஹெக் செய்யவும் வாய்ப்புண்டு, ஆனால் Whatsapp போன்ற Applications உலகத்தர வரிசையில் அதிக பாதுகாப்புமிக்க Instant Chat Messengers களாக இருக்கின்றது. இதனை நாளுக்கு நாள் இதன் தயாரிப்பாளர்கள் update செய்து கொண்டே இருக்கின்றனர். இதனால், இதனை ஹெக் செய்தென்பது இயலாதா ஒரு காரியமாகும். ஆனால் தற்போது நம்மத்தியில் பலர் GB WHATSAPP எனக்கூடிய புதிய Application ஐ பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதில் Whatsapp ஐ விட அதிக வசதிகள் செய்யப்பட்டிருப்பதனால் இதனை பயன்படுத்துகின்றர். இதிலும் உங்களுடைய Whatsapp Chat களுக்கு உத்தரவாதமில்லை என்பதனை விளங்க வேண்டும்…
பொதுவாக கூறினால், யாருமே தானாக ஒரு Phone ஐ ஹெக் பொன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. நம்மைப் போன்றவர்கள் மேற்கொள்ளும் தேவையில்லாத நடவடிக்கைகள் மூலமாகத்தான் மற்றவர்களுக்கு முக்கியமாக ஹெக்கர் பொன்றவர்களுக்கு நமது விபரங்கள் அனுப்பப்படுகின்றன.
இனையத்தில் Password க்களை பாவிக்கும் போது எக்காரனத்திற்காகவும் பாவிக்ககக்கூடிய Browserயில் Save செய்ய வேண்டாம். பலருடைய Passwords இதன் மூலமே திருடப்படுகின்றது. நீங்கள் பல பேர் வெளிக் கணனிகளில் அல்லது எனையவர்களின் கணனிகளிளோ அல்லது மொபைல்களிலோ பயன்படுத்தும் பொழுது நீங்கள் மறதியாகவே அதில் Save செய்து விடுவீர்கள். இயன்றவரை வெளியில் இனையத்தைப் பயன்படுத்தும் பொழுது, Browserகளில் கானப்படக்கூடிய INCOGNITO MODE யினைப் பயன்படுத்தவும். இதன் மூலம் உங்களது செயற்பாடுகள் கணனியில் பதிவு செய்வதனை தடுக்க முடியும்.
Password களை உருவாக்கும் பொது, கட்டாயம் பல நவீன தொழிநுட்ப வல்லுனர்கள் அறிவுருத்தினத்திற்கமைவாக அமையுங்கள். இயலுமானவரை பல Passwords களை பயன்படுத்துங்கள். ஒரே Password யினை அனைத்திற்கும் பயன்படுத்துவதன் மூலம் உங்களது சம்பந்தப்பட்ட அனைத்து Emails, Facebook, Bank Details போன்றவற்றை ஒரே தடவையில் பெற முடியும் என்பதனை மறவாதீர்கள்.. 9 எழுத்துள்ள சொல்லை 5 நாட்களிலும் 10 எழுத்துள்ள சொல்லை 4 மாதத்திலும் 11 எழுத்துள்ள சொல்லை 10 வருடத்திலும் 12 எழுத்துள்ள சொல்லை 200 வருடத்திலும் கண்டுபிடிக்க முடியும். இயலுமானவரை 12 எழுத்துக்கு மேல் சொற்களை அமையுங்கள். அவ்வாறு அமைக்கும் போது $,@,%,&,*,!,/ போன்ற குறியீடுகளை பாவியுங்கள். அர்த்தமுள்ள சொற்களை பாவிக்க வேண்டாம்.
அடுத்து, இனையம் என்பது பலருக்கும் உதவிகரமானதாக இருக்கும் அதேவேளை இதன் பின் முகம் யாருக்கும் தெரியாது. உலகத்தில் நாம் மொபைலில் பயன்படுத்தும் எந்த ஒரு அப்ளிகேசனோ அல்லது செப்வெயாரோ எந்த ஒரு சேவையையும் இலவசமாக தர போவதே இல்லை. நீங்கள் நினைக்கலாம் Internet யில் நீங்கள் அனைத்தையம் இலவசமாக பெறுகிறீர்கள் என்று. உண்மை என்னவென்றால் யாரோ ஒருவர் அல்லது நீங்களு் சரி அதற்கு கட்டணம் செலுத்துகிறீர்கள். அதுதான் உண்மை.
Google Chrome வானது உங்களுடைய data க்களை இரகசியமாக கண்கானிக்கின்றது என்று சொன்னால் நம்புவீர்களா? வெளிப்படையான உண்மையும் அதுதான். நமக்கே தெரியாமல் Google நிறுவனத்திற்கு நாம் நம்முடைய பல தகவல்களை அனுப்பிக் கொண்டு இருக்கின்றோம். நீங்கள் நினைக்கலாம் எப்படி இது நடைபெறுகின்றது என்று… நீங்கள் YouTube யினை பயன்படுத்தும் போது சில விடயங்களை தேடிப் படித்திருப்பீர்கள். மீண்டும் தேடச் செல்லும் பொழுது நீங்கள் YouTube யினை திறந்தவுடனேயே பார்க்க முடியும் ஏற்கனவே தேடப்பட்ட விடயங்களுக்கு அமைவாக பல தகவல்களை அதில் போடப்பட்டிருக்கும். நீங்கள் அட, என்ன இது அப்படி என்று அதனுள் சென்று பார்வை இடுவீர்கள். இதனைத்தான் அவர்கள் எதிர்பார்த்து இவ்வாறான விடயங்களினை மேற்கொள்கின்றார்கள்.
ஆகவே, மேற்கூறிய விடயங்களை கருத்திற்கொன்டு இணையம் மீதான செயற்பாடுகளில் ஈடுபடுங்கள்.
"தூவானத்தின் விழிப்புணர்வு"
Post a Comment