வீரத்தின் விளைநிலமாய் வாழ்ந்த தமிழ் தேசியத்தின் தேசிய சின்னம் நான்
வீரத்தின் விளைநிலமாய் வாழ்ந்த
தமிழ் தேசியத்தின் தேசிய சின்னம் நான்
நீங்கள் காட்டில் போர் புரிந்த போதும்
படுத்துறங்கியபோதும்
என் இருப்பிடத்தையே பாதுகாப்பாய் கொண்டபோதும்
நான் பாதுகாவலனாகவே மாறியிருந்தேன்!
என் இருப்பிடம் அழித்து உறவுகளை கவர்ந்த வேளையில்
உதவிக்கரம் நீண்ட
உறவொன்று உள்ளதென்று
காட்டை விட்டு நாட்டை நோக்கி வந்தேன்...
காட்டிலே நான் கண்ட மாவீர்கள் இல்லை இவர்கள்..........
ஆயிரம் பேர் சுற்றி நின்றார்
வகை வகையாய் ஆயுதம் கொண்டார்
விசாரிக்க முன்னமே தண்டனை என்றார்.....
தமிழ் தேசிய விலங்கல்லவா!?
ஆயிரம் பேர் சுற்றி வளைத்தும்
அடங்கவும் இல்லை அடிபணியவும் இல்லை..!
மறத்தமிழர் குலமல்லவா!?
எதிர் நின்று எதிர்க்க யாருமில்லை....!
மார்பில் பாய்ந்து வேட்டையாடும் எனக்கு
மறைந்திருந்து தாக்கியது மர்மமாய் இருந்தது!
போராடி மாண்டேன்,மறுபடி புகட்டினேன்........
தமிழ் தேசியத்திற்கு மட்டுமல்ல விலங்கிற்கும் துரோகமே வீழ்ச்சி என்று!.
பகுத்தறிவு படைத்த மாணிடா???
Post a Comment