நந்தவனக் காதல்.....

நந்தவனக் காதல்.....


சிறகடித்து திரியும் 
வண்ணமிடப்படா வண்ணத்துப்பூச்சி நான்
நந்தவனத்தில் ஓர் பூவிற்காய் ஆசையுற்றேன்......!

பள்ளிப்பருவத்தில் கண்டெடுத்த வெண்பூ அவள்
நானே துரத்திச் சென்றேன்....
துரத்தியும் திரும்பும்
கரப்பான்பூச்சியாய் நின்றேன்....
நான் கொண்ட மோகமும் சொன்னேன்....
இடைவந்த பூச்சியால் கவரப்பட்டது
அந்ந பூ......!

காலம் சென்று காதல் வந்தது
மீண்டும் ஒரு ரோஜாப்பூ....
முட்களோடு சேர்த்து
முத்தமும் இட்டிருக்கிறேன்....
கொஞ்சி விளையாடி
குதூகலம் அடைந்தேன்...
தேன் எடுக்கும் நிலையில் திசைமாறி
நந்தவன அட்டையுடன் ஒட்டிக்கொண்டது
அந்த பூ......!

இன்றும் பல்கலை நந்தவனத்தில்
பல பூக்கள் பூத்து செழித்திருக்கிறது......
இன்னமும் சிறகடித்துக்கொண்டே
இருக்கிறேன்....
காதலுக்காக அல்ல
அந்த பூக்களின் வண்ணங்களில் 
சில எனக்கும் ஒட்டிக்கொள்ளட்டும் என்று.....!


"தூவானத்தின் பூக்காதல்"

No comments