உன்னிச்சை குளமும் மட்டு விவசாயமும் தவறுகள் யாருடையது....?


உன்னிச்சை குளமும் மட்டு விவசாயமும் தவறுகள் யாருடையது....?



அனுபவமில்லாத அதிகாரியாலேயே இந்த தவறு நடந்துவிட்டது - நீர்ப்பாசன திணைக்களம்.

அதிகாரிகள் கடமை தவறியதால், கோடி ரூபா பெறுமதியான வயல் நிலங்கள் அழிந்தன - ஊடகம்

உன்னிச்சை விவசாயிகள் மீது அதிகாரிகளுக்கு இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இப்பழிவாங்கல் இடம்பெற்றுள்ளது - விவசாயிகள்

கடந்த பல ஆண்டுகளாக உன்னிச்சை நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் கடந்த சில நாட்களாக பல பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர். கடந்த 24ந் திகதி இரவு திடீரென உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதனால் ஏழை விவசயிகளின் பல ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்பட்டதனால் பல இலட்ச ரூபாய்கள் நட்டமடைந்துள்ளனர். இப்பிரச்சினைகளின் காரணமாக வயல் நிலங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் எதிர்காலத்திலும் உன்னிச்சைதிட்டத்தின் கீழ் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலமை காணப்படுகின்றது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகளை தொடர்பு கொண்டபோது பின்வருமாறு கருத்து தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த 19.05.2018 திகதியிலிருந்து குளத்தில் இருந்த நீர்மட்டத்தை குறைக்கும்படி பலதடவைகள்  நீர்பாசன திணைக்கள ஊழியர்களுக்கு அறிவித்துள்ளனர். ஆனால், 23.05.2018 திகதி வரை நீர்பாசன திணைக்கள ஊழியர்கள் தமது அசமந்த போக்கினாலும் கவலையீனமாக இருந்தமையாலும் விவசாயிகளது வேண்டுகோளை தட்டிக்கழித்துள்ளனர். எனினும் 23.05.2018 திகதி  இரவு நீர்மட்டம்  மணித்தியாலத்திற்கு  ஒரு  வீதம்  மிகவேகமாக அதிகரித்து  வந்ததையிட்டு அடுத்த நாள் அதாவது 24.05.2018 அன்று பிற்பகல் 3 மணியளவில் அரை அடி மட்டத்தில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து எவ்வித  அறிவித்தலும்  இன்றி  இரவோடு இரவாக 15 அடி தண்ணீர்  திறந்து  விடப்பட்டுள்ளது. எதுவித தகவலும் தெரியாத விவசாயிகள் தங்களது வாடிகளில் இருந்து  கழுத்தளவு நீரில் தப்பித்து வெளியேறியுள்ளார்கள். இதனால்  அவர்களது  உடமைகள்  வயலுக்குரிய  பசளைகள் அனைத்தும் நீரோடு அடித்து செல்லப்பட்டுள்ளன.  இவ்வேளை இங்கு எந்த ஒரு உத்தியோகத்தர்களோ அதிகாரிகளோ சமூகமளித்திருக்கவில்லை எனவும் இந்த தவறை மூடி மறைத்து தங்களை விசாரணைகளில் இருந்து காத்து கொள்வதற்காகவே உயரதிகாரிகளின் தூண்டுதலினால் நீர்பாசன திணைக்கள ஊழியர்கள் பொய்யான போராட்டங்களை மேற்கொள்வதாக விவாசயிகள் தொடர்ந்து கருத்து தெரிவித்தனர்.

இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பாய்ச்சல் நிலங்களை உடனடியாக பார்வையிட்டு அதற்குரிய  முறையில் சீர் செய்து கூடிய விரைவில் புனரமைப்பு செய்தால் இனி மிச்சம் இருக்கின்ற பயிர்களையாவது காப்பாற்றக்கூடிய நிலை உருவாகும்.  ஆகவே உரிய அரச அதிகாரிகளை ஏற்பட்ட அழிவுகளை  கணிப்பிட்டு மதிப்பீடுகளை மேற்கொண்டு  உரிய நட்ட ஈடுகளை வழங்க வேண்டுமல்லவா?










"தூவானத்தின் தேடல்"

No comments