"இசைக்கு பிறந்தநாள்..."



"இசைக்கு பிறந்தநாள்"

இசைக்கும் இளையராஜாவுக்கும் வேறு வேறு தேதிகளில் பிறந்த நாள் இல்லையென்று!


இளையராஜா என்பது வெறும் பெயரோ... ஒரு வழக்கமான இசைக் கலைஞனோ அல்ல... ஒரு நூற்றாண்டின் அவதாரம், மரியாதை, கவுரவம் அந்தப் பெயர்.. பெயருக்குரியவர்.

பாமரனுக்கும் இசையின் உன்னதத்தை உணர்த்துவதற்காக, அதன் இசையின் பழைய மரபுகளைப் பெயர்த்தெறிந்த புரட்சிக்காரர் அவர்.



இன்று பலரும் சுகமாகப் பயணிக்கும் தமிழ்த் திரையிசையின் ராஜபாட்டையை பல பாடுகளுக்கிடையில் போட்டுத் தந்தவர். இன்றும் ஜீவ இசை கிளம்பும் ஒரே இடம் அவரது விரல்களின் தழுவலில் சுகித்துக் கிடக்கும் அந்த ஆர்மோனியமே!

இன்று இசையின் பிறந்த நாள் என்றால், சிலர்.. ஆம், மிகச் சிலர்.. ஸ்ருதி பேதம் காட்டக் கூடும். ஆனால், யோசித்துப் பார்த்தார்களென்றால்... அவர்களுக்கு மட்டுமல்ல.. அத்தனைப் பேருக்கும் புரியும், இசைக்கும் இளையராஜாவுக்கும் வேறு வேறு தேதிகளில் பிறந்த நாள் இல்லையென்று!



இந்த நாற்பதாண்டுகளில் இளையராஜா இசையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 1000. இன்றைக்கு எதையெல்லாம் நவீனம் அல்லது புரட்சிகரமான இசை என சிலாகிக்கிறோமோ, அவற்றையெல்லாம் கால் நூற்றாண்டுக்கும் முன்பே, போகிற போக்கில் தந்துவிட்டவர் இளையராஜா.

இன்று அவரது பிறந்த நாள். எத்தனையாவது பிறந்த நாள் என்ற ஆண்டுக் கணக்கு எதற்கு... வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனாக, இளையராஜா ஜீவித்திருக்க வாழ்த்துவோம்!




"தூவானத்தின் இசைச்சாரல்"

No comments