Nipha_Virus இன்று இலங்கையில்...உயிர்க்கொல்லி!
Nipha_Virus இன்று இலங்கையில்...
Nipha_Virus இன்று இலங்கையில் தென்பகுதி மற்றும் வடபகுதிகளில் வேகமாக பரவும் கொள்ளை நோய்( Epidemic). இந்த நோயானது 2015ம் ஆண்டு இந்தியாவில் குறிப்பாக கேரளா பகுதியில் அதிக உயிர் இழப்புக்களை ஏற்படுத்திய நோய் . நாம் இன்று மிகவும் அச்சமடையும் நோய் எதுவென்றால் டெங்கு இதன் மரணவீதத்தை பார்த்தால் 1%-2% ஆகும்(குறைவு) ஆனால் Nipha_virus இதன் மரணவீதம் பார்த்தால் 50%(அதிகம்). இந்த நோயானது ஒருவரை பீடிக்குமானால் அவர் இந்த நோயிலிருந்து மீள்வது மிகக்கடினம். இன்று வரை நீபா வைரசுக்கு பிரத்தியேக மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. பொதுவான ரைபாலாரின்( Ribavarin) மற்றும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் ( Paracetamol) மருந்துகளே அளிக்கப்படுகின்றது.
இந்த நிபா வைரஸ் ஆனது மூளையை தாக்கி கோமா மற்றும் மூளைக்காய்ச்சலை ( Meningitis) ஏற்படுத்தி இறுதியில் உயிர்_இழப்பை ஏற்படுத்துகின்றது.
இந்த வைரஸ் ஆனது பெரும்பாலும் வௌவாலின் எச்சம் மற்றும் உமிழ் நீரிலிருந்தே மனிதனுக்கு பரவுகின்றது. இது எவ்வாறு எனின் வௌவால் கடித்த பழங்களை மற்றும் அதன் எச்சம் பட்ட பழங்களை நாம் உண்ணும் போது அது நேரடியாக ( Nipah virus) எமது இரத்தத்தில் கலக்கின்றது. இதன் தாக்கம் படிப்படியாக அதிகரித்து இறுதியில் எம் மூளையை தாக்கின்றது. எனவே நாம் பழங்களை வாங்கும் போதும் உண்ணும் போதும் அவதானித்து அதாவது சிதைவடைந்த பழங்கள் காயப்பட்ட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழங்களை தவிர்ப்பதோடு நன்றாக நீரில் அலசி கழுவியோ தோலை நீக்கிய பின்னர் உட்கொள்வதன் மூலம் இந்த ஆட்கொல்லி (nipah virus) நோயிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
உயிர்_பெறுமதியானது.
"தூவானத்தின் ஆரோக்கியம்"
Post a Comment