அந்த வியர்வைத்துளிகளுக்கான சிறப்பு பெயர்...........

அழுகை


என் இதயத்தின் வலிகளை
நான் என் கண்களிலே மறைத்துக்கொள்கிறேன்
அவற்றின் வெப்பத்தினால்
என் கண்களும் அடிக்கடி
வியர்க்கின்னறன....

அந்த வியர்வைத்துளிகளுக்கான
சிறப்பு பெயர்......
அழுகை

என்னுடனே பிறந்த
முதல் உறவு அழுகை
என் கண்களில் அழுகைக்கான
கண்ணீர் வற்றியதுமில்லை
வறண்டதுமில்லை....

என் அழுகையின் ஆழம்
கண்ணீரில்
மூழ்கும் என் 
தலையனைக்கு மட்டுமே
தெரியும்...

என் கண்ணீரை துடைப்பதற்காக
நான் கைக்குட்டைளை
பயண்படுத்துவதில்லை
என் விழிநீரின் உப்புகளினால்
அது துருப்பிடித்துவிடுமோ
என்ற பயம்...


என் அழுகைக்காக 
பெரும்பாலும்
குளியலறைகளையே 
பயண்டுத்துகிறேன்
அவை ஒருபோதும் எனை
காட்டிக்கொடுத்ததில்லை...

எனது சில நேர சிரிப்புக்கள்
என் கண்ணீர்துளிகளை 
சேமித்துக்கொண்டிருக்கின்றன
இரவு நேர அழுகைக்காக!




No comments