தமிழ் தேசியத்தின் தலை நகரம் இன்று........ தறுதலை நகரமாய் மாற்றம் காரணம் ஏனோ?
யாழ்ப்பாணம்....
தமிழ் தேசியத்தின் தலை நகரம்
இன்று........
தறுதலை நகரமாய் மாற்றம்
காரணம் ஏனோ?
வரலாறு கண்டெடுத்த
மாவீரர்களின் தேசம்
வறண்டோடி
கறைபடிய காரணம் என்ன?
அன்றொருநாள்....
இசையின் நாதம் அறுபட
அந்நியர் ஆதிக்கம் காரணம்
ஆனால்
புங்குடுதீவு கண்ணியின்
கதறலுக்கு........
ஜாதிகள் இல்லையடி ...
பாரதியின் மறத்தமிழ்
வழித்தோன்றல்களும்
சித்திரத்தேரை
சிந்திக்கும் திறன் இழந்து
JCB துனை கொண்டு
வலம் வந்ததே........
பனை நிழல் சூழ்ந்த யாழ்
பச்சிளம் குழந்தையை
பாலியலும் பின்
பாழ் கினற்றிலும் வீசுகின்றது......
வீரத்திற்கு பேர் போன தேசம்
விலை மாதுக்களுக்கும்
விபச்சாரத்திற்கும்
போதைபொருளிற்கும்
அடையாளம் தருகிறதே......
கொடியேந்திய
தேசிய விலங்கையும்
கொடூரமாய் கொலை செய்து
நடப்பில் நாணயம் பேசுகிறது....
தமிழீழத் தாயகத்தின்
தாகம் தீர்க்க
மாண்ட வீர்களின்
மாணத்தை காக்கவாவது
இனி தன் கலாச்சாரம்
பேனி வாழ்வோம்!
Post a Comment