மக்களுக்காக பதவி துறந்தேன்........
மக்களுக்காக பதவி துறந்தேன்........
வருடக்கணக்கில் வகித்த
அமைச்சு பதவியை
மக்களுக்காய் துறந்தேன்
வடக்கின் இழிவு நிலை கண்டு
மனம் வருந்தி
வலிகளே வார்த்தைகளாக
வெளிப்பட்டன.............
விளக்கம்
காணாமல் ஆக்கப்பட்டோரை
கண்டெடுக்க வருடம்
கடந்த போராட்டத்தில்
அங்கம் இல்லை.....
கூட்டத்தின் குரல்களிலும்
ஒரு கூக்குரல் இல்லை
ஆறு வயது சிறுமி
சிதைக்கப்பட்டு
அறுக்கப்பட்டபோதும்
ஆதங்க சப்தம் இல்லை...
புல்லும் முளைத்த
முள்ளிவாய்காலின்
மீறிய உரிமை பற்றிய
எண்ணம் எள்ளளவும்
இன்றுவரை இல்லை....
இத்தனை நாள் இல்லாத
ஆதங்கம் திடீரென வெளிப்பட்டதா?
இல்லை
மதயானைக்கூட்டத்தின்
தல யானையால்
வெளிப்படுத்தப்பட்டதா?
ஆட்சியில் அதிகாரம் பெற்று
மாட்சியில் மக்களை மறந்து
தலைநகரில் தலைமுறை
சொத்தும் குவித்து
வேழத்தின் வினையில்
பதவி இழந்தவுடன்
மக்களுகாய் எனும்
பாசாங்கு வேண்டாம்!
Post a Comment