தமிழா...! இது உன் அடையாளம்....

தமிழா...! இது உன் அடையாளம்....



ஆதி தமிழனின் அடையாளம் 
ஆழ் கடலில் துயிலும்
மறத்தமிழனின் சரித்திரக் கண்டம்

முத்தமிழ் சங்கம் கண்டு
மூவேந்தர்க்கு முன் தோன்றி
நாலடியார் முதல் அக,புற நானுறாய் திருக்குறள் ஈறாக 
நூல் தந்த கண்டம்

உலகாண்ட பரம்பரையை 
உலகிற்கு உணர்த்த 
சிதைந்தும் சிதையாமல்
சிறப்புற்ற பல சிதைவுகளை
இன்றும் தந்து கொண்டிருக்கும்
கண்டம்............................................
                            அது குமரிக்கண்டம்

ஊழ் செய்யாத தமிழர் கண்டத்தை
இயற்கையின் ஊழி
மூழ்கடிக்காது இருந்திருப்பின்
குறுந்தொகையில் குளிப்பாட்டி
அகநானுற்றில் அரவனைத்து
ஆளாக்கிவிட்ட அன்னைத்தமிழ்
இன்று அனாதியாக
தேச தேசமாய் சிதறியிருக்காது

மறத்தமிழ் கண்டம் 
மாத்திரமே மூழ்கியது.... தமிழா!
உன் மரபனு மூழ்கவில்லை
உன் மரபனு வழியே 
தட்டி எழுப்பி விடு...........
அந்த வீரத்தை விவேகத்தை
உன் அறிவியலை!

உலகாண்ட இனம் நாம் என
ஓங்கி முறசறைவோம்!







No comments