கலைக்கப்பட்டு பாதியில் நிற்கும் பாராளுமன்றம்
கலைக்கப்பட்டு பாதியில் நிற்கும்பாராளுமன்றம்
நள்ளிரவுகளில் ஏற்றப்படும்
பெற்றோல் விலைகளுக்கு
மாற்றாக மாற்றம்
பிரதமர்..........!
"யானைகள் ஆபத்தானவை"
அடர்ந்த காட்டிலும் ஆலகால அரசியலிலும்...
வெற்றிலையில் பார்க்கப்பட்ட
எதிர்காலம் காலாவதியாகிவிட
மொட்டுக்களும் யானைகளும்
முட்டிமோதி கொள்கின்றன
பெரும்பான்மை காண்பிக்க!
பூட்டிய வீடுகளும் திறக்க மறுக்க
அங்குசம் கொண்டு தகர்ப்பதா
அரசியல் வரம் கேட்பதா என
சிந்திப்பதுக்குள்ளே............
பின்வாசல் கதவுகள் திறக்கப்பட்டு
அங்கே சிலர் காணாமல்
போய்க்கொண்டு இருக்கிறார்கள்....
கூன்டேற்றுவேன் என
வெள்ளை வேனுக்குகெதிராய்
எழுப்பிய குரல் ஒழிந்து
சாதகமாய் கலைக்கப்பட்ட
பாராளுமன்றம் கூட
சட்டத்திற்கு எதிரானதாய் தீர்ப்பும்
வரவே..........!
கலைக்கப்பட்டு பாதியில் நிற்கும்
பாராளுமன்றம்
கூடப்படாத அமைச்சரவை
யாரேனத் தெரியாத பிரதம மந்திரி
இவை.....................
நல்லாட்சியின் வரலாற்றுச் சாதனைகள்.......
~ கரியவன்~
yanai abathanavai
ReplyDelete