உன்னைத் தேடித் தேடி இம்மலர் வாடத்தொடங்கியது....

இத்தனை அவசரம் கொண்டாயா?



மண்மீது காதல் கொண்டு 
அதில் விதை ஒன்று விதைத்தாய்
தினமும் நீர் ஊற்றி
தவராமல் ஓரிரு முறை பசளையிட்டு
இதமான கதகதப்பும் விதை சுவாசிக்க காற்றும்
உன் பார்வையால் வெளிச்சமும் தந்து
நாளுக்கு நாள் காத்து நின்றாய்
உன் ஆசைபோல் செடியும் வளர்ந்தது
அதில் மலரும் மலர்ந்தது
இத்தனை பாடுபட்டு உயிர்பித்த உன்னைத் 
தேடித் தேடி இம்மலர் வாடத்தொடங்கியது
மலருக்கு தாகம் எடுக்க அதை தண்ணீர் ஊற்றி தணிக்க நீ இல்லை
நோயினால் வாட அதை அரவணைக்க இன்று நீ இல்லை
இதழோ கலையிழந்து போக
புத்துணர்வோ பூச்சியமாக
வண்டு தேடிய நறுமணம் உயிர்பற்றுப் போக
வண்ணமோ வலு இழந்து போக
நாட்களும் கடந்து போக வாழ முடியாத மலரோ செடியின் வேருடன் கருகிப் போக ஐயோ எனப் பரிதாபமடைய நிறைவாய் நீ அங்கும் இல்லை
எங்குதான் சென்றுவிட்டாய்
மலரோ மடிந்தது மண்ணோ இனி தரிசு நிலம் ஆயிற்று
இதற்குத்தான் இத்தனை அவசரம் கொண்டாயா?

~Renu~

No comments