இலங்கைத் தமிழர்களும் HNB முறன்பாடுகளும்..... நடந்தது என்ன?

இலங்கைத் தமிழர்களும் HNB
முறன்பாடுகளும்..... நடந்தது என்ன?




கடந்த மே18, முள்ளிவாய்க்கால் நினைவு தினமன்று கிளிநொச்சி ஹற்றன் நெஷனல் வங்கியின் பிராந்திய அலுவலக்கதில் நினைவஞ்சலி நிகழ்வை நடாத்தியுள்ளனர் ஊழியர்கள்.



நினைவு நிகழ்வின் புகைப்படம் வெளியானமையினால் பார்வையிட்ட கொழும்பு தலமைச்செயலகம் நினைவஞ்சலியை ஏற்பாடு செய்த உதவி முகாமையாளரையும், ஊழியர் ஒருவரையும் தற்காலிக பனி நீ்க்கம் செய்துள்ளது. மேலும் ஊழியர்கள் அனைவரையும் பனி நீக்கம் செய்வதற்கு கிளிநொச்சி விரைந்துள்ளது தலமைச்செயலக விசாரனைக்குழு.

இந் நிலையில் சம்பவத்தை கேள்வியுற்ற  தமிழ்சமூகத்தினர் பொங்கி எழுந்துள்ளனர். தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத HNB எதிராக களமிறங்கியுள்ளனர்.  தமது வங்கி கணக்குகளை முடக்குவதுடன் சமூகவலைத்தளங்களிலும் வங்கிக்கு எதிரான கருத்துக்களும்  வலுப்பெற்றுள்ளது.



இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 3000ற்கும் மேற்பட்ட கணக்குகள் முடிக்கப்பட்டதாக உத்தியோகபூர்வமற்ற செய்திகள் தெரிவித்துள்ளன.


இதன் மூலம் HNB பாரிய நட்டத்தினை எதிர்நோக்கவுள்ளதாக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

பனீ நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் உடன் பனி அமர்த்தபடாவிடின் வங்கி பாரிய இழப்பை சந்திக்க நேரிடுவது திண்னம்.

தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத  உங்களுக்கு எங்களின் பணம் மட்டும் தேவையா?

இதுவே இன்றைய கேள்ளவி

"தூவானத்தின்  புலனாய்வு"

No comments