வரலாற்றில் இன்று - ஜூன்2!
வரலாற்றில் இன்று - ஜூன்2!
1886: அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளீவ்லன்ட், பிரான்செஸ் போல்சொம் எனும் பெண்ணை வெள்ளை மாளிகையில் திருமணம் செய்தார்.
வெள்ளை மாளிகையில் வைத்து திருமணம் செய்த முதல் ஜனாதிபதி இவராவார்.
1946: இத்தாலியில் மன்னராட்சியை ஒழித்து குடியரசாக்குவதற்கு ஆதரவாக சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் வாக்களித்தனர் .
1953: பிரித்தானிய மகா ராணியாக இரண்டாம் எலிஸபெத் முடிசூடினார்.
1979: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர், தனது சொந்த நாடான போலந்துக்கு விஜயம் செய்தார். கம்யூனிஸ்ட் நாடான போலந்துக்கு விஜயம் செய்த முதலாவது பாப்பரசர் இவராவார்.
1985: பெல்ஜியத்தில் கால்பந்தாட்டப் போட்டியொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 39 பேர் பலியானதையடுத்து, இங்கிலாந்து கழகங்கள் இங்கிலாந்துக்கு வெளியே ஐரோப்பாவில் போட்டிகளில் பங்குபற்ற ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கம் தடை விதித்தது.
1999: பூட்டானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.
வரலாற்றில் இன்று - ஜூன்1 👇👇👇
http://thuvaanams.blogspot.com/2018/05/1.html?m=1"தூவானத்தின் வரலாற்றுத்துளி"
Post a Comment