"அரசியல்வாதிகளே உங்கள் வீட்டிலும் ஒரு ரெஜினா இருக்கலாம்........!"
"அரசியல்வாதிகளே உங்கள் வீட்டிலும் ஒரு ரெஜினா இருக்கலாம்........!"
மொட்டொன்று பறிக்கப்பட்டு
இதழ் இதழாக கசக்கப்பட்டு
முடிவில் பாழ் கிணற்றில்
வீசப்பட்டது......
குமரிக்கும் குழந்தைக்கும்
மனைவிக்கும் மகளுக்கும்
பெண்மைக்கும் தாய்மைக்கும்
வேற்றுமை இல்லையெனில்
உங்கள் பிறப்பிற்கு அர்த்தம் தேட
புது யுகம் ஒன்றே தேவை.....!
பால் மணம் மாறாத
அந்த மழழையிடம்
என்ன சுகம் கண்டீர்கள்?
அடக்க முடியவில்லை எனில்
அறுத்தெறியுங்கள் உங்கள்
ஆண்மைகளை
கண்கட்டிய துனியை அவிழ்த்து
விடுங்கள்
கையேந்திய தராசையும் பிடுங்கி
விடுங்கள்
சட்டமும் நீதியும் செய்யாததை
நீதி தேவதை செய்து முடிப்பாள்
கையில் வாளேந்தி...
நான்கு சுவர்களுக்குள்
முகத்திரை மூடி வழங்குவதும்
ஏழு கம்பிகளுக்குள் உணவோடு
பாதுகாப்பு வழங்குவதும்
அல்லவே தண்டனை......
நடு வீதியில்
நிர்வாணமாய் நிற்கவைத்து
கற்களால் எறிந்து
கொல்லப்பட வேண்டும்
இல்லை
அறுக்கப்பட வேண்டும் ஆண்மை!
முன்னமே செய்திருப்பின்
இன்னேரமும் துள்ளியிருப்பாள்
ரெஜினா!
இப்போதாவது செய்துகாட்டுங்கள்
இன்னும் பல ரெஜினாக்கள்
பாதுகாக்கப்படலாம்....!
Post a Comment