இலக்கியத்தை பெண்ணாக தேர்ந்தெடுத்தேன்

எனக்கும் திருமண ஆசை வந்தது....!


இலக்கியத்தை பெண்ணாக 
தேர்ந்தெடுத்தேன்
உணர்வுகளால் சேலை கட்டினேன்
எழுத்துக்களை கோர்த்து 
தாலி கட்டினேன்...

வார்த்தை குங்குமத்தை
பேனாவால் தொட்டு பொட்டு வைத்தேன்

சிந்தனைக் கட்டிலில்
வெள்ளைத்தாள் மெத்தையில்
மொழியால் முத்தமிட்டு
மறைநிலை உத்திகளோடு
உவமைகளால் கட்டிப்பிடித்தேன்...

எதுகை மோனைகளை
 போர்வையாக்கி
ரகசிய வார்தைகளால்
வரைந்த இரவில்
அந்தரங்க சொற்களால்
கருவறையின் கற்பனையில்
சிசுவாய் சுமக்கவிட்டேன்...

பிரசவ காலத்தில் 
தந்தை தகுதி பெற்றேன்
எல்லா குழந்தைக்கும்
கவிதை என்றே 
பெயரும் வைத்தேன்..

வாசகர் முன்பள்ளிக்கு 
நாள்தோறும் அனுப்பி வைத்தேன்
ஆனால்............
இப்பொழுதும் என் மனைவி 
கர்ப்பமாகவே இருக்கிறாள்.

No comments