முறைதவறி பிறந்ததாலும் வீசப்பட்டிருக்கலாம்!


பச்சிளங் குழந்தையல்லவா?


குப்பைத் தொட்டியிலிருந்து 
துர்நாற்றம்.....
வீதியால் நடப்பவர்களும் 
மூக்கை மூடியே செல்கிறார்கள்
யாரும் அதை எட்டிப்பார்பதாக இல்லை.....

என் மூக்கையும் அந்த 
துர்நாற்றம் துளைக்க
குமட்டிய வயிறோடு பார்த்தேன்
............................................................
பொலீத்தின் பையிலே
சுற்றப்பட்ட நிலையில் 
ஒரு சிசு!

தொப்புள்கொடி அருகிலும்
பிறப்புறுப்பிலும் முகத்திலும்
ஈக்களின் நடமாட்டம்..........
வீசப்பட்டு மூன்று நாட்கள் 
ஆகியிருக்கும்.....

வறுமையின் கொடுமையால்
                         வீசப்பட்டிருக்கலாம்!
முறைதவறி பிறந்ததாலும்
                        வீசப்பட்டிருக்கலாம்!
முடமாக பிறந்ததாலும்
                        வீசப்பட்டிருக்கலாம்!
அல்லாவிடில்
பெண்ணாக பிறந்ததாலும்
                        வீசப்பட்டிருக்கலாம்!

ஆயிரம் சிந்தனைகள் எனக்குள்ளே!

இறுதியாக இறைவனிடம் 
எனது இரைஞ்சல்...............

வேண்டுவோர் பலர் இருக்க
பிள்ளை வரவேண்டி உனை
கெஞ்சுவோர் பலர் இருக்க
வீதியால் வீசிச்செல்லும்
வேசிகளுக்கு கொடுக்காதே....
தாய்மை எனும் ஸ்தானத்தை!

No comments