உன் மனம் என்னிடம் இருக்கையில் உன் கணவனோடு எதை இனைத்தாய்...
என் நண்பனை நானாக உருவகிக்கையில் உமிழ்ந்தது இந்த கவி....
இருமனம் இணையும் திருமணம்
உனக்கு
உன் மனம் என்னிடம் இருக்கையில்
உன் கணவனோடு எதை இனைத்தாய்...
ஆளரவமற்ற இடத்திலும்
ஆர்ப்பரிக்கும் சன நெரிசலிலும்
உனை நான் பிரிந்ததில்லை...
பயணிகள் பேரூந்தில் கூட
என் உதடுகளால் உன் கன்னத்தை
வருடியிருந்தேன்...
மானசீகமாக எனை நீ கணவனாய்
ஏற்ற பிறகும்
உன் மனசாட்சியை மறைத்து
மறுமணம் செய்ய
காரணம் என்ன?
உன் கணவனோடு நீ
தனிமையில் இருக்கையில்........
உன் அங்கத்தில் நடை பயின்ற
என் விரல்களையும்
உதட்டோரம் நடந்த உரையாடல்களையும்
உன் நினைவு திரும்பாமல் இருக்கவே
பிராத்திக்கிறேன்...
மன்னித்துவிடு மற்றைய
தகவல்களை என்னால் எழுத்தில்
தர முடியாது...!
என் மனக்கதவுகளை திறந்து
உனை வழியனுப்பிய பிறகும்
உன் காலடிச்சுவடுகளின்
வடுக்கள் மறையவில்லை...
என் முகப்புத்தகத்திலும் சரி
முகத்திலும் சரி
உனது பாதிப்பில் இருந்து
என் பதிப்பை மாற்ற
முடியவில்லை...
நீ பரிசளித்த விக்கிரகத்தை
இன்னும் வழிபடுகிறேன்
காதலுக்காக அல்ல
கடைசிவரை உன் நலனுக்காக...
எச் சந்தர்ப்பத்திலும்
கடந்த காதல் நினைவுகளை
உன் கணவனிடம் பகிர்ந்து விடாதே!
உனை துரோகியாக நினைந்து
வஞ்சித்துவிடலாம்...
இறுதியாக ஒரு வேண்டுகோள்....
உனக்கு பிறக்கும் பிள்ளைக்கு
எனது சாயலில் பெயர் வைத்துவிடாதே!
அவனை அழைக்கையில்
குற்ற உணர்வே உனை கொன்றுவிடும்........!
திருமண வாழ்வு சிறக்க.................
ப்ரியமுடன்
Post a Comment