போர் எனில் போர்........ சமாதானம் எனில் சமாதானம்...
போர் எனில் போர்.............
சமாதானம் எனில் சமாதானம்..............
ஆயிரமாயிரமாய்
சிதறிய உடல்கள்
அத்தனையும் தமிழன்னை
மக்கள்...........
தேசமெங்கும் இரத்த வெள்ளம்
அடக்கு முறையும்
கற்பழிப்பும்
கொலையும் கொள்ளையுமாக
தமிழ் அடையாளம் இல்லாமல்
அழிக்கும் திட்டம்
தஞ்சம் புகுந்த ஆலயங்களும்
தேவாலயங்களும்
பீரங்கிகளால் தகர்க்கப்பட்டது
குண்டுமழைக்கு
குடைபிடித்த மாந்தர்களுக்கு
நச்சுவாயு புது பாடமாகவே
அமைந்தது
சரித்திரத்தையே புரட்டிப்போட்ட
முப்படை கண்டியாண்ட
முக் குலத்தோர் வழிதோன்றல்களும்
மூவேந்தர் பரம்பரையுமே வீழ்ந்து
கிடந்து...
வரலாற்றை ஆண்டு
ஓங்கி முறசறைந்த தமிழர்
வீர வரலாற்றின்
கால ஏட்டில்
கறுப்பு ஜூலை மட்டும் கறுப்பாகவே
பதிவுசெய்யப்பட்டிருக்கும்...
Post a Comment