"காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்"

நட்பிற்கு இலக்கணம் தந்த
நண்பனே!



நட்பிற்கு இலக்கணம் தந்த
நண்பனே!
உனது காதல் காவியத்திற்காய்
நம் நட்பை கழுமரம் ஏற்ற
துணிவது சரிதானா?

நீ அவளை கரம்பிடிப்பதையே
கனவாக கொண்டவன் நான்
உனது காதல் சாத்தியத்திற்காக
நம் நட்பின் சத்தியத்தை
தொலைக்கிறாய்....
என் நாழிகைகள் கூட
நலம் பெறவில்லை
உடன் நீ இல்லாததால்

நானும் ஒன்றறிவேன்
நட்பை நீ இழக்க நினைப்பது
உன் இச்சையால் அல்ல
உன் காதலியின் நச்சரிப்பால்
என்று...

இன்று வரை நீ வாய் திறந்து
எனை விலகுவதாய் உரைத்ததில்லை
அந்த வார்த்தை உமிழாத வரை மட்டுமே
உனக்கும் எனக்குமான உறவு
நீடிக்கும் என நினைத்திருந்தேன்
நட்பின் நலம் அறிந்து
நானாகவே விலகவும்
சித்தமாகிறேன்...

உன் காதலிக்கும் எனது நன்றிகள்
உனக்கு முதல் எனக்கு காதலி
கிடைத்திருந்தால்
நீ பெற்ற வேதனை நானும் உற்றிருப்பேன்.....


"காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்"
உன் மூலமே உணர்ந்தேன்....

No comments