எது தீட்டு.............?

எது தீட்டு.............?


மழலை பசி தீர்த்து
மார்பு வழியே வரும் 
வெண்மை புனிதம்...
கரு தந்து கருவும் மகவுமாய்
வெளி வரு வழியில்
செம்மை தீட்டு....!

கன்னியாய் கழிந்து
தாய்மை பெற்று 
சிசுவுடன் சிவப்பு புனிதம்...
தாய்மை பெற தகுதியும்
கன்னியாய் முதல்
குருதி தீட்டு....!

எதை தீட்டு....?

விலக்கென்று தெரிந்து
விலகி நிற்கும் உன் மனதை தீட்டு!

உடுத்தும் ஆடையில் குருதி
கண்டு சுளிக்கும்
முகத்தில் மாற்றம் தீட்டு!

பெண்மை உடலின் மாற்றம்
அடையாளம் அன்றி
ஆபாசமாய் கருதும்
புத்தியை தீட்டு!

தீட்டு பெண்களில் மட்டும்
 கானுகின்ற உன் கண்களை தீட்டு!

"தீட்டு தீட்டத்தகாதது அல்லவே...!"

No comments